பயணியருக்கு கட்டுப்பாடு பிரிட்டன் அரசுக்கு எதிர்ப்பு

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

லண்டன்; பிரிட்டன் நாட்டிற்கு வருவோர், கட்டாயம், 14 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவுக்கு, அந்நாட்டு விமான நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பிரிட்டனில், நேற்று முதல், வெளிநாட்டில் இருந்து விமானம், ரயில் அல்லது கப்பல் மூலம் வரும் உள்நாட்டினர், நிபந்தனையுடன் அனுமதிக்கப்படுகின்றனர். பிரிட்டன் வந்தவுடன், அடுத்த இரு வாரங்களுக்கு, எங்கு தனிமையில் தங்குவர் என்பது உள்ளிட்ட விபரங்களை அவர்கள் அளிக்க வேண்டும். விதிமுறையை மீறுவோருக்கு, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை எதிர்த்து, 'ரையான் ஏர், ஈசி ஜெட்' ஆகிய இரு விமான நிறுவனங்கள், பிரிட்டன் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன; அத்துடன், வழக்கு தொடர பணிகளையும் துவக்கியுள்ளன. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:இரு வாரங்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவு நியாயமற்றது. இது, பிரிட்டன் குடிமக்களுக்கு மட்டுமின்றி, வெளிநாட்டினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே, கொரோனாவால் சுற்றுலா துறை பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர்.

இதை மேலும் அதிகரிக்கவே, அரசு உத்தரவு உதவும். ஆகவே, அரசு இதை திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, ''மக்களின் பாதுகாப்பை விட மேலானது எதுவும் இல்லை என்ற போதிலும், இந்த உத்தரவு குறித்து, வரும், 28ம் தேதி மறுபரிசீலனை செய்யப்படும்,'' என, பிரிட்டன் உள்துறை அமைச்சர் ப்ரீத்தி படேல் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X