பொது செய்தி

இந்தியா

எல்லையில் 11,800 பேருக்கு வேலை ஜார்க்கண்ட் அரசு ஒப்புதல்

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

புதுடில்லி; எல்லை சாலைகள் நிறுவனம், ஜார்க்கண்டைச் சேர்ந்த, 11 ஆயிரத்து, 800 பேரை பணியமர்த்த, அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

லடாக்கில், சீன எல்லை அருகே, சாலை, பாலம் அமைப்பது உள்ளிட்ட பணிகளை, எல்லை சாலைகள் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. இப்பணிகளுக்காக, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, 11 ஆயிரத்து, 800 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில், 8,000 பேர், லடாக்கிலும், எஞ்சியோர், உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் எல்லையோர சாலை அமைப்பு பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவர்.

வழக்கமாக, இத்தகைய பணிகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தான் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ஆனால், இம்முறை, நிலையான ஊதியப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன், வழக்கத்தை விட, 15 - 20 சதவீத ஊதிய உயர்வுடன், மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக, எல்லை சாலைகள் நிறுவனத்திற்கும், ஜார்க்கண்ட் அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதன் அடிப்படையில், எல்லை சாலைகள் நிறுவனம், தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த, ஜார்க்கண்ட் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள செய்தி:நம் பழங்குடியின சகோதரர்கள், நீண்ட காலமாக, நாட்டின் எல்லைப் பகுதியில் சேவையாற்றி வருகின்றனர்.அவர்களுக்கு உரிய மரியாதை, நல உரிமைகள், பயன்கள் ஆகியவை, ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.புலம்பெயர் தொழிலாளர் சட்டத்தின் கீழ், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன், உரிய பாதுகாப்பும் செய்து தரப்பட வேண்டும் என விடுத்த கோரிக்கையை, எல்லை சாலைகள் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.ஒவ்வொரு தொழிலாளிக்கும், 15 - 20 லட்சம் ரூபாய்க்கு சிறப்பு திட்டத்தின் கீழ், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ராணுவ அமைச்சகத்தின் வேண்டுகோளை ஏற்று, மத்திய உள்துறை அமைச்சகம், ரயில்வே அமைச்சகத்திற்கு ஒரு உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த மே, 22ல், 11 சிறப்பு ரயில்கள் மூலம், ஜார்க்கண்டில் இருந்து, 11 ஆயிரத்து, 815 தொழிலாளர்கள், ஜம்மு - காஷ்மீர், லடாக், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X