சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பக்கவாத நோயாளி வெட்டி கொலை பழிக்கு பழியாக ஜி.எச்.,சில் பயங்கரம்

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

மதுரை; மதுரை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, பக்கவாத நோயாளியை வெட்டிக் கொன்ற ஐந்து பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை, கரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 40. இடது கை, கால் செயல்படாத நிலையில், அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தில், வார்டு எண், 101ல் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, முகக் கவசம் அணிந்து வந்த ஐந்து பேர், வார்டுக்குள் புகுந்து, முருகனின் கழுத்து, இடது கை, வயிறு உட்பட, 13 இடங்களில் அரிவாளால் வெட்டி, தப்பி ஓடினர்.

சம்பவ இடத்திலேயே முருகன் இறந்தார்.அதிர்ச்சியடைந்த சக நோயாளிகள், உறவினர்கள் அலறியடித்து, வார்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். மதிச்சியம் போலீசார் விசாரிக்கின்றனர்.கரும்பாலையில், கஞ்சா விற்பனையும், ரவுடியிசமும் அதிகமாக இருந்தது. இதை தடுக்க, சந்துரு, 41, என்பவர் முயற்சியால், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.ஆத்திரமுற்ற ரவுடி, 'பட்டா' ராஜசேகர் என்பவர், சந்துருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் முந்திக் கொண்ட சந்துரு, கூட்டாளிகள் எட்டு பேருடன் சேர்ந்து, ஜூலை, 19ல் ஆழ்வார்புரம் வைகையாற்றில், ராஜசேகரை வெட்டி கொலை செய்தார். இவ்வழக்கில், இரண்டாவது குற்றவாளி முருகன்.கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், ஜாமீனில் வெளி வந்த சந்துரு, முருகன் உட்பட ஒன்பது பேரும், உயிருக்கு பயந்து, கரும்பாலை பகுதிக்கு வராமல் இருந்தனர். மூன்று மாதங்களுக்கு முன், சந்துரு வீட்டின் மீது, ராஜசேகர் கூட்டாளிகள், பெட்ரோல் குண்டு வீசினர். கண்காணிப்பு கேமராக்களை உடைத்தனர். இதையடுத்து, ஒன்பது பேரின் குடும்பத்தினரும், பாதுகாப்பு கேட்டு, தனித்தனியே போலீசில் மனு கொடுத்தனர்.இந்நிலையில், முருகனுக்கு பக்கவாதம் ஏற்பட, ஜூன் 5ல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதையறிந்த ராஜசேகரின் கூட்டாளி விக்னேஸ்வரன் உட்பட ஐந்து பேர், முருகனை கொன்றது தெரிந்தது. இது தொடர்பாக, சிலரிடம் விசாரணை நடக்கிறது.பனியன் தொழிலாளிதிருச்சி, மண்ணச்சநல்லுார், கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 35. திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தவர், ஊரடங்கால், ஊர் திரும்பினார்.இவரது உறவுக்கார பெண்ணை, அதே ஊரைச் சேர்ந்த ராஜதுரை, 26, என்பவர் திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக, இருவருக்கும் முன் விரோதம் இருந்தது.

நேற்று முன்தினம் கார்த்திக், தன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கூட்டாளிகள் மூவருடன் அங்கு வந்த ராஜதுரை, கார்த்திக்கை வெட்ட முயன்றார்.கார்த்திக் தப்பி தெருவில் ஓட, விரட்டிச் சென்ற நால்வரும், அவரை நடுரோட்டில் வெட்டிக் கொன்று தப்பினர். நால்வரையும் போலீசார் தேடி வருகின்றனர்.'மாஜி' வீரர் கைதுவேலுார் அடுத்த, கம்மவான்பேட்டையைச் சேர்ந்தவர், செல்வம், 42; ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், வேலுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில், காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி, சித்ரா, 36; அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலு, 40. இருவருக்கும், கள்ளக்காதல் இருந்துள்ளது. இது தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. கள்ளக்காதலை கைவிட சித்ரா மறுத்துள்ளார்.ஆத்திரமடைந்த செல்வம், கட்டையால் தாக்கியதில், சித்ரா உயிரிழந்தார். வேலுார் தாலுகா போலீசார், செல்வத்தை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X