கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வழிபாட்டு தலங்களுக்கு வழிகாட்டுதல் கோரிய வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

மதுரை; மத வழிபாட்டு தலங்களை திறக்கும் பட்சத்தில், பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

துாத்துக்குடி மாவட்டம், தலைக்காட்டுபுரம் ஜெயபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு:ஊரடங்கிலிருந்து வழிபாட்டு தலங்களுக்கு அரசு தளர்வு அளிக்கும் பட்சத்தில், அனைத்து மதத்தினரும், அவரவர் மதம் சார்ந்த வழிபாட்டு தலங்களுக்கு செல்வர். பாரம்பரிய விழாக்கள்,பூஜைகள், அன்னதானம்,கும்பாபிஷேகம், புனித யாத்திரையில் பங்கேற்பர்.

அப்போது, முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் அவசியம்.அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் பட்சத்தில், பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டுதல்களை பிறப்பிக்கக் கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.

நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு:வழிபாட்டு தலங்களுக்கு, அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்ட பின், அதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பதாக, மனுதாரர் கருதினால், நீதிமன்றத்தை நாடலாம். மனுதாரர், முன்கூட்டியே நீதிமன்றத்தை நாடியது ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு, நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X