பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.76.65 லட்சம் கொள்முதல்

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கமிட்டிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் தங்களின் விளை பொருட்கள் 76.65 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி பகுதியில் அறுவடை பருவம் துவங்கிய நிலையில் மார்க்கெட் கமிட்டிக்கு உளுந்துார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் எள் உள்ளிட்ட விளை பொருட்களைக் கொண்டு வரத் துவங்கியுள்ளனர். இதனால் நடைபெற்று வரும் அறுவடை பருவத்தில் கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு எள் மூட்டைகள் வரத்துக்கு அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று 900 மூட்டை எள், 400 மூட்டை மக்காச்சோளம், 50 மூட்டை கம்பு, 50 மூட்டை உளுந்து, 30 மூட்டை வேர்க்கடலை, 10 மூட்டை சின்னசோளம், 5 மூட்டை ஆமணக்கு, தலா ஒரு மூட்டை காராமணி, தட்டைப்பயிர், மொச்சை உள்ளிட்ட தானியங்கள் விற்பனைக்கு வந்தன.

அதில் சராசரியாக ஒரு மூட்டை எள் 7,190 ரூபாய்க்கும் , மக்காச்சோளம் 1,354, உளுந்து 5,595, கம்பு 2,359, வேர்க்கடலை 6,170, சிவப்பு சோளம் 3,436, ஆமணக்கு 3,179, காராமணி 6,039, தட்டைப்பயிர் 2,934, மொச்சை 2,559 ரூபாய்க்கு விலை நிர்ணயிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு 548 விவசாயிகள் கொண்டு வந்த 1,450 மூட்டை தானியங்கள் மொத்தமாக 76 லட்சத்து 65 ஆயிரத்து 785 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X