சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 18 கிலோ பறிமுதல்

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட 18 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்யும் பணி நேற்று துவங்கியது.

கலெக்டர் கிரண் குராலா உத்தரவின் பேரில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பணிகள் நகராட்சி சார்பில் நேற்று துவங்கியது. கள்ளக்குறிச்சி நகராட்சி துாய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பரிமளா தலைமையில் பரப்புரையாளர்கள் அகிலா, பாரதலட்சுமி, மணிமேகலை, சோபா உள்ளிட்டோர் மார்க்கெட் மற்றும் கடைவீதி பகுதிகளில் உள்ள 32 கடைகளில் ஆய்வு நடத்தினர்.

அங்கே அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது தெரிந்து அவர்களிடமிருந்து 18 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். இனி தொடர்ந்து சோதனை நடத்தி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் வெங்கடாசலம் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X