பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி செயலர் மீது கலெக்டரிடம் புகார் மனு

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : வாணாம்பட்டு ஊராட்சியில் முறைகேடுகளில் ஈடுபடும் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம இளைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

மனு விபரம்:திருநாவலுார் ஊராட்சி ஒன்றியம், வாணாம்பட்டு ஊராட்சியில் அரசு வழங்கிய வீடுகளை கட்டாமலே கட்டியதாக ஊராட்சி செயலர் முறைகேடு செய்துள்ளார். அதேபோல், தொகுப்பு வீடுகளை பழுது நீக்கம் செய்யாமலே செய்ததாகவும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திலும் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளார்.இது குறித்து கேள்வி கேட்கும் கிராம இளைஞர்களை, அவரது உறவினர்கள் மூலம் தகராறில் ஈடுபடச் செய்து காவல் நிலையத்தில் புகார் செய்ய வைக்கிறார்.

இதனால், வாணாம்பட்டு கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே, முறைகேடுகளில் ஈடுபடும் ஊராட்சி செயலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X