பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே மாதத்தில் 4 மடங்கு விலை உயர்வு

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

செஞ்சி : செஞ்சியில் கறிக்கோழியின் விலை கடந்த ஒரு மாதத்தில் நான்கு மடங்கு உயர்ந்திருப்பது கறிக்கோழி பண்ணையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

கொரோனா நோய் தாக்கம் ஏற்பட்டதும் சமூக வலைதளங்களில் கறிக்கோழின் மூலம் நோய் பரவுவதாக தவறான செய்தி பரவியது. இதனால் கறிக்கோழியை வாங்க ஆட்கள் இன்றி விலை படு வீழ்ச்சியடைந்தது.தமிழகம் முழுவதும் கறிக்கோழி விற்பனையாளர்கள் பல கோடி நஷ்டமடைந்தனர். பண்ணைகளில் இருந்து எடுத்துச் செல்லும் செலவுக்கு கூட விற்பனை விலை கட்டுப்படியாகாமல் போனதால், கறிக்கோழியை ஆங்காங்கே அழித்து விடும்படி கறிக்கோழி நிறுவனங்கள் பண்ணையாளர்களுக்கு தெரிவித்தனர்.

செஞ்சி பகுதியில் ஒரு கிலோ உயிர் கோழி 25 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். இதன் பிறகு கொரோனா நோய் வராமல் இருக்க கறிக்கோழி சாப்பிடுவது நல்லது என செய்திகள் பரவின. இதையடுத்து மீண்டும் கறிக்கோழி விலை உயர துவங்கியது.கடந்த மாதம் கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையான கறிக்கோழி நேற்று 240 ரூபாய்க்கு விற்பனையானது. கறிக்கோழி விலை வீழ்ச்சியின் போது பெருத்த நஷ்டமடைந்த செஞ்சி பகுதி கோழிப்பண்ணை உரிமையாளர்கள், தற்போது ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட நான்கு மடங்கு விலை உயர்ந்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X