74 நாட்களுக்கு பின் பாம்பனில் மீன்வரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

74 நாட்களுக்கு பின் பாம்பனில் மீன்வரத்து

Added : ஜூன் 08, 2020
Share
 74 நாட்களுக்கு பின் பாம்பனில் மீன்வரத்து

ராமேஸ்வரம்; 74 நாட்களுக்கு பின் பாம்பன் விசைப்படகு வலையில் அதிக மீன் சிக்கியதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஊரடங்கினால் முடங்கிய தமிழக விசைப்படகு மீனவர் களை, ஜூன் 1 முதல் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசு அனுமதித்தது. இதில் 74 நாள்களுக்கு பின் நேற்று முன்தினம் பாம்பனில் இருந்து 45 விசைப்படகில் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், நேற்று காலை பாம்பன் கரை திரும்பினர்.

இதில் ஒரு படகில் சராசரியாக 1.5 டன்னில் 'முண்டகண் பாரை' மீன்கள் சிக்கியது.இம்மீனை வியாபாரி கள் ஒரு கிலோ ரூ.60 முதல் 70 வரை வாங்கி, கேரளா, கோவை மீன் மார்க்கெட்டுக்கு அனுப்பினர்.74 நாள்களுக்கு பின் உயர் ரக மீன்கள் சிக்கா விட்டாலும், தொழில் நஷ்டமின்றி மீன்கள் சிக்கியது மகிழ்ச்சியாக உள்ளது, என மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X