சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில்கள் திறக்காததால் பக்தர்கள் ஏமாற்றம்

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

தியாகதுருகம் : கோவில்கள் நேற்று திறக்கப்படும் என எதிர்பார்த்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கு சில தினங்களுக்கு முன்பே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்டது. கோவிலுக்குச் சென்று வழிபட முடியாததால் பக்தர்கள் பலர் கவலையில் இருந்தனர். வீடுகளிலேயே சுவாமி படங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.அதன்படி நேற்று 8ம் தேதி கோவிலைத் திறக்க அனுமதி அளித்தது.

இந்த அறிவிப்பு பக்தர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் கோவில்களை திறக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டது.இதனால் கோவிலைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு வரை கோவில் திறப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்படாமல் மூடி இருந்தது. இது பக்தர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X