பொது செய்தி

இந்தியா

திருமலையில் 2 மணி நேரத்தில் 1,200 பேர் தரிசனம்

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Tirupati temple, tirupati balaji temple, temples reopen, 
திருமலை, திருப்பதி, திருநள்ளாறு

திருப்பதி; திருமலையில், இரண்டு மணி நேரத்தில், 1,200 பேர் ஏழுமலையானை தரிசித்ததாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், சுப்பாரெட்டி தெரிவித்தார்.

திருமலையில் நேற்று, தேவஸ்தான ஊழியர்களை வைத்து, சோதனை முறை தரிசனம் துவங்கப்பட்டது. இது குறித்து, அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது:திருமலையில், 79 நாட்களுக்கு பின், நேற்று தரிசனம் துவங்கப்பட்டது.

தேவஸ்தான ஊழியர்கள், திருப்பதியில் உள்ள அலிபிரியில், முகக் கவசம் அணிந்து, தெர்மல் ஸ்கேனிங் முடித்து, தங்கள் உடமைகள் மற்றும் வாகனங்களை, துாய்மை செய்து, திருமலையை அடைந்தனர்.அங்கு ஏற்படுத்தப்பட்ட, இரண்டு தரிசன நுழைவாயில்களிலும், பக்தர்களுக்கு 'சானிடைசர்' வழங்கப்பட்டது. பின், சமூக இடைவெளியுடன், ஊழியர்கள் தரிசனத்திற்கு சென்றனர்.ஒரு மணி நேரத்திற்கு, 500 பேர் என, அதிகாரிகள் தோராயமாக கணக்கிட்டனர். ஆனால், இரண்டு மணி நேரத்தில், 1,200 பேர் தரிசனம் செய்தனர். மூன்று நாட்கள் சோதனை முடித்த பின், ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை, படிப்படியாக உயர்த்தப்படும்.மேலும், தரிசனத்திற்கு செல்பவர்கள் கிரில் கம்பிகள், கதவுகள், சுவர்கள் உள்ளிட்டவற்றை தொடாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தரிசன வரிசை, கோவிலுக்குள் உள்ள குடிநீர் குழாய்களில், கையால் தொடாமல், நீர் அருந்தும் விதம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பக்தர்களுக்கு அருகாமையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பி.பி.இ., கிட்கள் வழங்கப்பட்டுள்ளன. பக்தர்கள் கூடும் இடங்களில், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, கிருமிநாசினி திரவம் தெளிக்கப்படுகிறது.கோவில் முழுதும் நேற்று மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தொடர்புடைய அனைத்து கோவில்களிலும், நேற்று தரிசனம் துவங்கியது.


திருநள்ளாறு திறப்பு


latest tamil news


புதுச்சேரி மாநிலம், காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், 76 நாட்களுக்கு பின், நேற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை, 6:00 முதல் பகல், 12:00 மணி; மாலை, 4:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடை திறக்கப்பட்டது. ஆறு கால பூஜைகளில், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

பக்தர்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர்.முதல் நாள் என்பதால், வெளியூர் பக்தர்கள் யாரும் வரவில்லை. உள்ளூர் பக்தர்கள் மட்டும், சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.முன்னதாக, ராஜகோபுர வாசலில், தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் மூலம் கைகளை நன்கு கழுவிய பின், மருத்துவ பரிசோதனை நடத்தி, பக்தர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiyaga Rajan - Chennai,இந்தியா
09-ஜூன்-202010:21:44 IST Report Abuse
Thiyaga Rajan தயவு செய்து உள் மாநில மக்களுக்கு மட்டும் அனுமதிக்கவும் ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X