சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆயத்தம்! புதிய நிர்வாகிகளை நியமிக்க அ.தி.மு.க., தலைமை...கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதவியை பெற ஆர்வம்-

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிர்வாகிகளை நியமனம் செய்ய அ.தி.மு.க., தலைமை ஆயத்தமாகி வருவதால் பதவியைப் பிடிக்க கட்சியினர் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கடந்த ஜனவரி 8ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது. இதைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வார்டு வரையறைகள் முடிந்து அதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தேர்தல் நடைபெறுமா என கேள்விக் குறியாகி உள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க., தலைமை தயாராகி வருகிறது. அதன் முதல் கட்டமாக அனைத்து ஊராட்சி செயலாளர்கள் பதவியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யவதற்கான பட்டியல் ரகசியமாக தயாராகி வருகிறது. ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டமாக இருந்தவரை வடக்கு, தெற்கு என இரு மாவட்டமாக பிரித்து நிர்வாகிகள் செயல்பட்டனர். தற்போது கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில் இதனை பிற மாவட்டங்களைப் போன்று இரண்டாக பிரித்து இரண்டு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அவ்வாறு பிரிக்கப்பட்டால் கிழக்கு மாவட்டத்திற்கு தற்போதைய மாவட்ட செயலாளர் குமரகுரு தொடர வாய்ப்பு உள்ளது. மேற்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு, முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேல் பாபு ஆகியோர் மாவட்ட செயலாளர் பதவியைப் பிடிக்க போட்டியில் இறங்குவார்கள்.முதல்வர் பழனிசாமிக்கு உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., குமரகுரு நெருக்கமாக உள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பிரிக்காமல் ஒரே மாவட்டமாக கொண்டு அதன் மாவட்ட செயலாளராக குமரகுரு செயல்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவை அனைத்தும் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒன்றிய செயலாளர்கள் நியமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

இதில் தற்போதுள்ள ஒன்றிய செயலாளர்கள் ஒரு பகுதிக்கு தொடர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளது.மற்றொரு பகுதிக்கு புதியவர்களை நியமனம் செய்ய பட்டியல் தயாராகி வருகிறது. இதனால் பதவியைப் பிடிக்க பலரும் மாவட்ட செயலாளர் குமரகுருவை சந்தித்து தங்களுக்கு வாய்ப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல் கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் பதவியை பிடிக்க களத்தில் இறங்கியுள்ளனர்.

தற்போதைய கொரோனா பாதிப்பால் மேல்மட்ட நிர்வாகிகளை நேரில் சந்திக்க முடியாத நிலை உள்ளதால் மொபைல் போனில் தொடர்பு கொண்டு தங்களுக்கு வாய்ப்பு வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதற்கிடையே, ஒன்றியங்களை இரண்டாக பிரித்து புதிய செயலாளர்கள் பட்டியல் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. இப்பட்டியலை கட்சித்தலைமை விரைவில் அறிவிக்கும் என்பதால் தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X