பொது செய்தி

தமிழ்நாடு

வட மாநில தொழிலாளர்கள்

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் தங்கி வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு ரயிலில் செல்ல அனுப்பி வைக்கப்பட்டனர்.

விக்கிரவாண்டியில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 31 பேர் பணிபுரிந்து வந்தனர். தற்போது, கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், வருவாயின்றி தவித்து வந்தனர்.இவர்களை தமிழக அரசு சார்பில் சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயிலில் திரும்பிச் செல்ல நேற்று பிற்பகல் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசு பஸ்சில் அனுப்பி வைக்கப் பட்டனர்.தொழிலாளர்களை தாசில்தார் பார்த்திபன், மண்டல துணை தாசில்தார் முருகதாஸ், வருவாய் ஆய்வாளர் விஜயன், வி.ஏ .ஓ.,க்கள் உதய சங்கர், பால்ராஜ் மற்றும் வருவாய் துறை பணியாளர்கள் வழியனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X