சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்சூரன்ஸ் தொகை வழங்காமல் கரும்பு விவசாயிகள் அலைக்கழிப்பு

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

மூங்கில்துறைப்பட்டு : சங்கராபரம் வட்டத்தில் உள்ள கரும்பு இன்ஸ்சுரன்ஸ் தொகையை வழங்கால் காலம் தாழ்த்தி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

சங்கராபுரம் வட்டத்தில் 2018-2019ம் ஆண்டில் தண்ணீர் பற்றாக்குறையால் பல ஆயிரம் ஏக்கர் அளவிலான கரும்பு பயிர்கள் காய்ந்தன. கரும்பு பயிருக்கு இன்ஸ்சுரன்ஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி ஒரு ஏக்கருக்கு 1,650 ரூபாய் வீதம் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் இன்சூரன்ஸ் தொகையை கட்டியுள்ளனர்.காய்ந்து சேதமான கரும்புகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து இன்ஸ்சுரன்ஸ் ஒப்பந்த படிவத்தில் கையெழுத்து வாங்கிச் சென்றனர். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை விவசாயிகளுக்கு இன்ஸ்சுரன்ஸ் தொகை கிடைக்கவில்லை.

விவசாயிகள் பலமுறை மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் கரும்பு பயிர் செய்து அவற்றிக்காக பல ஆயிரங்கள் செலவு செய்து நஷ்டத்தில் உள்ளனர்.விவசாயிகளின் நலன் கருதி 2018-2019ம் ஆண்டிற்கான இன்ஸ்சுரன்ஸ் தொகையினை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.அதுமட்டும் மட்டுமின்றி அந்த ஆண்டில் விவசாயிகள் புதிய கரும்பு பயிர் செய்ய வழங்கிய லோன் தொகை 52 ஆயிரம் ரூபாய், பழைய கரும்புக்கு வழங்கிய 42 ஆயிரம் ரூபாயை மட்டும் கராறாக விவசாயிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

ஆனால், கரும்புக்கு வழங்கிய லோன் மட்டும் வாங்கியவர்கள் அந்த கரும்பு காய்ந்து போனதுக்கு இன்ஸ்சுரன்ஸ் தொகையினை வாங்கித் தர காலம் தாழ்த்தி வருகின்றனர். அதிகாரிகள் விவசாயிகளுக்கு கரும்புக்கான இன்சூரன்ஸ் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X