மாலை 6:00 மணிக்கே பஸ் போக்குவரத்து நிறுத்தம் பணி முடிந்து செல்லும் பெண்கள் கடும் அவதி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாலை 6:00 மணிக்கே பஸ் போக்குவரத்து நிறுத்தம் பணி முடிந்து செல்லும் பெண்கள் கடும் அவதி

Added : ஜூன் 08, 2020
Share

செஞ்சி : செஞ்சியில் தனியார் கடைகளில் வேலை செய்யும் பெண்கள் இரவு வேலை முடிந்து வீடு செல்வதற்கு பஸ் வசதி இன்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

செஞ்சி பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் செஞ்சியில் உள்ள மளிகைக் கடை, சூப்பர் மார்க்கெட், ஜவுளிகடை, மெடிக்கல், நெட் சென்டர் உட்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இதற்கு முன்பு வரை கிராமங்களுக்குசெல்ல இரவு 10:00 மணி வரை டவுன் பஸ்களை இயக்கினர்.கொரோனா ஊரடங்கின் காரணமாக பஸ்கள் நிறுத்தப்பட்டதும். பெண்கள்வேலைக்கு வர முடியாமல் வீடுகளில் முடங்கினர். இதனால் வருவாய் இழுந்து தவித்து வந்தனர். கடந்த 1ம் தேதியில் இருந்து பஸ்,ஆட்டோ சேவை துவங்கியதும் மீண்டும் வேலைக்கு வருகின்றனர். காலையில் வரும் போது பஸ், ஆட்டோக்களில் வந்துவிடுகின்றனர்.

ஆனால், மாலை 6:00 மணிக்கே அரசு பஸ் சேவைகளை நிறுத்தி விடுகின்றனர்.இரவு 8:00 மணிக்கு கடைகளை மூடிய பிறகு வீடுகளுக்கு திரும்பி செல்ல செஞ்சியில் இருந்து எந்த கிராமத்திற்கும் பஸ் வசதி இல்லை. இதனால், வீடுகளுக்கு திரும்ப முடியாமல் செஞ்சிகூட்ரோட்டில் ஏராளமானோர் காத்துக்கிடக்கும் அவலம் உள்ளது.அந்த வழியாகச் செல்லும் ஏதாவது ஒரு வாகனத்தில் உதவி கேட்டு செல்லும் நிலை உள்ளது.

இல்லையென்றால் வீட்டிலிருந்து யாரேனும் பைக் போன்ற வாகனங்களைக் கொண்டு வந்து அழைத்துச் செல்லும் நிலை உள்ளது.வேலை முடிந்து செல்பவர்களில் பெரும்பாலான பெண்கள் திருமணம் ஆகாதவர்கள். இவர்கள் வீடு வந்து சேரும் வரை குடும்பத்தினர் மிகுந்த வேதனைக்கு ஆளாகின்றனர். எனவே செஞ்சியில் வேலை செய்யும் பெண்கள் கிராமங்களுக்கு செல்வதற்கு குறிப்பிட்ட முக்கிய வழித்தடங்களில் இரவு நேரத்தில் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X