பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி வாசிப்பாளர் மீது நடவடிக்கையா?: 'அமைச்சருக்கு இது அழகல்ல!'

Updated : ஜூன் 10, 2020 | Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (60)
Share
Advertisement
செய்தி வாசிப்பாளர் ,நடவடிக்கை, அமைச்சர்,

சென்னை : மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'வீடியோ' பதிவை வெளியிட்ட, செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது, நடவடிக்கை எடுக்கப்போவதாக பேட்டி அளித்த, சுகாதாரத்துறை அமைச்சருக்கு, செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.சங்கத் தலைவர், பிரபுதாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ் தொலைக்காட்சிகளின், முன்னோடி செய்தி வாசிப்பாளரும், சிறந்த நாடகக் கலைஞருமான வரதராஜன், கொரோனா பாதிப்பு குறித்து, தன் சொந்த அனுபவத்தை, வீடியோவாக பதிவு செய்திருந்தார்.மக்களிடம் வழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்த வீடியோ பதிவு என்பதையும், அதில் குறிப்பிட்டிருந்தார். உறவினரை மருத்துவமனையில் சேர்க்க இயலாமல் போனதையும் கூறியிருந்தார்.அந்த வீடியோவை பார்ப்போருக்கு, 'கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வீட்டுக்குள்ளேயே அடங்கி இருக்க வேண்டும்; வெளியில் சென்று, தொற்று ஏற்பட்டால், சிகிச்சை பெறுவது சிரமமாகி விடும்' என்ற, எண்ணம் மட்டுமே ஏற்படும்.வரதராஜன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை, பகிர்ந்து கொள்வது எப்படி வதந்தியாகும்.

அரசு மருத்துவமனைகளில், படுக்கைகள் நிரம்பி விட்டதாக, பல்வேறு அரசியல் விமர்சகர்களும், பல்வேறு தரப்பினரும், பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில், 'அந்த வீடியோ தவறானது; திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டுள்ளது; அவர் மீது, தொற்றுநோய் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, மிரட்டும் தொணியில், சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது, ஜனநாயகத்திற்கு ஏற்றதாக இல்லை.கருத்து சுதந்திரத்திற்கு விடப்படும் சவால் எனக்கருதி, கண்டனம் தெரிவிக்கிறோம்.வரதராஜன் மீதான நடவடிக்கைகளை, உடனடியாக கைவிட வேண்டும். முதல்வர் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
'அமைச்சருக்கு இது அழகல்ல!'சென்னையில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், முக்கியமான அரசு மருத்துவமனைகளில், கொரோனா வார்டுகள் நிரம்பி வழிகின்றன. சிகிச்சைக்கு சென்றால், 'இங்கு இடமில்லை; வேறு மருத்துவமனைக்கு போங்கள்' என, அனுப்புவதும், மருந்து, மாத்திரைகளை கொடுத்து, வீடுகளிலேயே தனியாக இருங்கள் என, டாக்டர்கள் திருப்பி அனுப்பும் நிலை தான் உள்ளது.

இதுபோன்ற நிலையை சந்தித்த, செய்தி வாசிப்பாளரும், நடிகருமான வரதராஜன், அதை வெளிப்படுத்தினார். இது, அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக அல்ல; மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்ற, நல்ல எண்ணம் தான். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர், அவரை திட்டித்தீர்க்காத குறையாக பேட்டி அளித்தார். அவர் மீது, தொற்று நோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, கர்ஜித்தார். அவர் பேட்டி அளித்தது, அவருடன் சண்டை போட தயாராக இருப்பது போல் இருந்தது. இத்தகைய செயல்பாடு, படித்த ஒரு அமைச்சருக்கு அழகல்ல. பாதிப்பு அதிகரித்து வரும் வகையில், அதற்கேற்ப சிகிச்சைக்கு தேவையான வசதிகளை அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும்; அதுதான் தற்போதைய அவசர தேவை.


Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
10-ஜூன்-202019:24:52 IST Report Abuse
தல புராணம் குட்கா மந்திரிக்கு இது தப்பில்லை..
Rate this:
Cancel
Gurumurthy Kalyanaraman - London,யுனைடெட் கிங்டம்
10-ஜூன்-202015:52:25 IST Report Abuse
Gurumurthy Kalyanaraman ஏற்கனவே ஒரு நர்ஸ் அரசாங்கத்தின் மேல் குறைகளை எடுத்து வைத்தார். வராத ராஜன் பேச்சு எங்கே இதை உறுதிப்பதுட்டுமோ என்று பயப்படுகிறார் போலும். அதுதான் வராத ராஜன் மேல் கோவம் வந்து கேஸ் போடும் லெவெலுக்கு கொண்டு விட்டது. இதற்கு பெயர்தான் ஜன நாயகம். யாரும் வாயை திறக்க கூடாது என்கிறாரா அமைச்சர்? இத்தனை நாள் அமைச்சர் ஓடி ஓடி உழைக்கிறார் என்ற பீலிங் இருந்தது. இப்பவும் இருக்கிறது. வராத ராஜன் மேல் கோவம் என்பது அதை எளிதாக கெடுத்து விடும் என்பதை அமைச்சர் மறந்துவிட்டார் போலும். அவர் மேல் வழக்கு போடுவது என்பது நன்றாக யோசிக்காத, அவசர முதிவு என்பதே மக்களின் எண்ணம். இந்த வழக்கை கைவிட்டு வேண்டுமென்றே வியாதியை பரப்பு பவர்கள் மேல் வழுக்கு போட்டு உள்ளே தள்ளுவது ஒன்றே அவுர் செய்ய வேண்டியது.
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
10-ஜூன்-202011:00:38 IST Report Abuse
Swaminathan Chandramouli இன்றைய நிலவரப்படி எதற்கு எடுத்தாலும் இவரை போல அமைச்சர்கள் பொது வாழ்வில் உள்ளவர்களை கடுமையாக விரட்டுவது அதிகமாகி விட்டது திருமாவளவன் , ஸ்டாலின் , திமுக பிரசன்னா வீரமணி இவர்களை என் மிரட்டமுடியவில்லை ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டியா
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
10-ஜூன்-202019:25:56 IST Report Abuse
தல புராணம்பாசமழை.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X