மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு மானியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு மானியம்

Added : ஜூன் 08, 2020
Share

சென்னை; 'மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, மானியம் வழங்கப்படும்' என, தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

தோட்டக்கலைத் துறைசேலம், நாமக்கல், கன்னியாகுமரி உட்பட, பல மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி பயிர்களை, மாவுப்பூச்சிகள் தாக்கத் துவங்கிஉள்ளன. இதனால், மகசூல் குறையும் வாய்ப்புள்ளது. இந்த மாவுப்பூச்சிகளால், பப்பாளி, சீதாப் பழ மரங்களும் பாதிக்கப்படலாம் என தெரிகிறது.

எனவே, மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த, 55 லட்சம் ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, பூச்சிகளை கட்டுப்படுத்தும் பணியை, தோட்டக்கலைத் துறை மேற்கொண்டு உள்ளது. இதுவரை, 10 ஆயிரம் ஏக்கரில், மாவுப்பூச்சிகள் ஒழிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், தங்கள் விளை நிலங்களில், மாவுப்பூச்சிகள் தாக்குதல் இருந்தால், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், உதவி அலுவலர்களை, விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துதோட்டக்கலைத் துறை பரிந்துரைக்கும், இரண்டு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி, மாவுப்பூச்சிகளை அழிக்க வேண்டும்; அதற்கான செலவு முழுதும், விவசாயிகளுக்கு மானியமாக, தோட்டக்கலைத் துறையால் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X