பொது செய்தி

தமிழ்நாடு

உணவு துறை உத்தரவுக்கு, 'பெப்பே'

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

சென்னை; ரேஷன் கடைகளுக்கு, அரிசி உள்ளிட்ட பொருட்களை, ௧௦௦ சதவீதம் அனுப்பும்படி, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டும், நுகர்பொருள் வாணிப கழகமும், கூட்டுறவு துறையும் பின்பற்றாமல், அலட்சியமாக உள்ளன.

அதனால், ரேஷன் கடைகளுக்கு செல்வோர், அனைத்து பொருட்களையும் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இதுகுறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:ஒரு கடையில், 1,000 கார்டுகள் இருந்தால், 70 சதவீதம் அரிசி, கோதுமை; 90 சதவீதம் மற்ற பொருட்கள் அனுப்பப்படும்.

ரேஷன் கார்டுகள் வைத்திருக்கும் வசதியானவர்கள், பொருட்கள் வாங்கா விட்டால் பிரச்னை ஏற்படாது.அலட்சியம்தற்போது, கொரோனா ஊரடங்கால் வசதியானவர்கள் உட்பட அனைவரும், ரேஷன் பொருட்களை வாங்குகின்றனர். மேலும், கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும், ஏற்கனவே வழங்குவதுடன், கூடுதலாக தலா, 5 கிலோ அரிசி வழங்கவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஆனால், அதற்கேற்றபடி, ரேஷன் கடைகளுக்கு முழு அரிசியும் அனுப்பப்படுவதில்லை. இது குறித்து, கூட்டுறவு அதிகாரிகளிடம் கேட்டால், 'வாணிப கழகம் அனுப்பும் அளவு தான் அரிசி வழங்கப்படும்; எந்த கடையில், அனைவரும் அரிசி வாங்குகின்றனர்' என, அலட்சியமாக பதில்அளிக்கின்றனர்.

இதனால், ரேஷனில் பொருட்கள் வாங்க வருவோர், அரிசி உட்பட, சில பொருட்கள் இல்லாமல், ஏமாற்றத்துடன் திரும்ப நேரிடுகிறது. எனவே, ரேஷன் கடைகளுக்கு, 100 சதவீத பொருட்களை அனுப்ப, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்

.இட வசதி இல்லைவாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரே சமயத்தில், அனைத்து கார்டுதாரர்களுக்கும் உரிய பொருட்களை வைக்க, பல கடைகளில் இட வசதி இல்லை; அதனால், கடைகளில் விற்பனைக்கு ஏற்ப, முழு அளவில் பொருட்கள் அனுப்பப்படுகின்றன' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X