அரசியல் செய்தி

தமிழ்நாடு

வம்பை விலைக்கு வாங்காதீங்க: வேலுமணிக்கு நேரு பதிலடி!

Added : ஜூன் 08, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
 வம்பை விலைக்கு வாங்காதீங்க: வேலுமணிக்கு நேரு பதிலடி!

சென்னை; 'தி.மு.க.,வை பற்றி, உள்ளாட்சி துறை அமைச்சர்வேலுமணி பேசுவது, வீண் வம்பை விலைக்கு வாங்குவதற்கு சமம்' என, தி.மு.க., முதன்மை செயலர், கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:கோட்டையில் அமர வாய்ப்பு கிடைத்து விட்டது என்பதற்காக, ஸ்டாலினை பார்த்து, சுட்டு விரல் நீட்டி பேச, வேலுமணிக்கு தகுதி இல்லை. ஊழல் வழக்கு விசாரணையில், நீதிமன்ற நோட்டீசை வாங்காமல் இருந்த வேலுமணி, அறிக்கை விடுவதற்கு, ஏதாவது தகுதி இருக்கிறதா?வீராப்புப் பேசுவது வீண் வம்பை விலைக்கு வாங்குவதற்கு சமம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில், சென்னை மாநகராட்சி முற்றிலும் தோல்வியடைந்து நிற்கிறது. சென்னையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குழு, சிறப்பு அதிகாரி, சிறப்பு ஒருங்கிணைப்பாளர், ஐந்து அமைச்சர்கள் குழு போடும் அளவுக்கு, நிர்வாகம் தோல்வி அடைந்து நிற்கிறது.தலைமை செயலரே, மாநகராட்சி கமிஷனரை கண்டித்து, கடிதம் எழுதி விட்டார்.

வேலுமணி, இந்நேரம் உள்ளாட்சி துறை அமைச்சர் பதவியை, ராஜினாமா செய்திருக்க வேண்டும். இன்னும், 11 மாதங்கள் தான். அவர், அமைச்சர் பதவியில் இருக்க முடியும். அப்போது, தி.மு.க., வினரை அடைத்த, அதே கோவை மத்திய சிறையில், அவரும் அடைக்கப்பட வேண்டியது வரும்.இவ்வாறு, நேரு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
10-ஜூன்-202010:52:45 IST Report Abuse
Swaminathan Chandramouli ஆக திமுக நேரு வம்பை கூட விலைக்கு விற்கிறார் போல யாருக்காவது வம்பு விலைக்கு வேண்டுமென்றால் திருச்சி நேருவிடம் வாங்கி கொள்ளலாம்
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
09-ஜூன்-202023:47:12 IST Report Abuse
unmaitamil திருச்சி மலைக்கோட்டை இன்னும் விநாயகர் பெயரில்லா அல்லது உன் பெயரில் எழுதிவிட்டாயா நேரு ராசா ?? இது உன் திருட்டு தலைவன் உன்னிடம் கேட்டதாக அன்றைய செய்தி ???
Rate this:
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
09-ஜூன்-202017:29:28 IST Report Abuse
Tamilselvan ஊழல் பற்றி பேசுகிறார் உத்தமசிகாமணி இவர்கள் செய்த ஊழல்களை சொன்னால் நாடே சிரிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X