வினியோகத்தில் தாமதம்

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

திருப்பூர், முதலிபாளையம், பாலாஜி நகரில் குடிநீர் வினியோகம் செய்து, 15 நாட்களாகிறது. வாரம் ஒருமுறையாவது குடிநீர் வழங்க வேண்டும்.-ஏ.திலகவதி, முதலிபாளையம்.குழியை மூட வேண்டும்திருப்பூர், கோர்ட் வீதி, வரசித்திவிநாயகர் கோவில் வளைவில் கேபிள் பதிக்க தோண்டிய குழியை சரிவர மூடவில்லை. வளைவில் வாகனங்கள் திரும்ப இடையூறாக உள்ளது. குழியை மூட வேண்டும்.-எம்.கணபதி, கோர்ட் வீதி.சாலையை சீரமைக்கலாமே!திருப்பூர் யுனிவர்செல், தியேட்டரில் இருந்து வாலிபாளையம் செல்லும் ரோடு, பாதாள சாக்கடை குழாய் பதிக்க குழி தோண்டி குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.-வி.திருநாவுக்கரசு,வாலிபாளையம்.வீணாகும் குடிநீர்திருப்பூர், லட்சுமி நகர் - பிரிட்ஜ்வே காலனி சந்திப்பில் கேட்வால்வில் இருந்து அழுத்தம் காரணமாக அதிகளவில் தண்ணீர் வீணாகிறது. மாற்றியமைக்க வேண்டும்.-ஏ.ஜேசுதாஸ், லட்சுமி நகர்.சிக்னல் சரி செய்யப்படுமா?திருப்பூர், கூலிபாளையம் நால்ரோடு சந்திப்பில் சிக்னல் பழுதாகியுள்ளது. பீக்ஹவர்ஸில் நெரிசல் அதிகமாகிறது. சிக்னலை சரிசெய்து, செயல்பாட்டு கொண்டு வர வேண்டும்.-வி.புண்ணியமூர்த்தி,பெரியாபாளையம்.தெருவிளக்கு எரிவதில்லைதிருப்பூர், கருமாரம்பாளையத்தில் இருந்து வாய்க்கால்மேடு செல்லும் சாலையில், தெருவிளக்கு எரிவதில்லை. இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பாதசாரிகள் நடந்து செல்ல பயப்படுகின்றனர்.-எஸ்.கணபதி, கருமாரம்பாளையம்.ரோடு படுமோசம்திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், புளிய மர தோட்டம் பகுதியில் குழாய் பதிக்க குழி தோண்டி சரிவர மூடவில்லை. மண் செருமி காணப்படுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.-ஆர்.தமிழரசன்,புளியமரத்தோட்டம்.போலீசார் கவனத்துக்குதிருப்பூர், நடராஜ் தியேட்டர் எதிர்புறம், ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் முன்னேறி வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. விதி மீறும் வாகன ஓட்டிகளை கண்காணிக்க வேண்டும்.-டி.சிவக்குமார், ஆலங்காடு.குப்பை அள்ளுங்கதிருப்பூர், தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் மீதமாகும் காய்கறி கழிவுகளை அப்படியே கொட்டி செல்கின்றனர். சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தேங்கிய காய்கறிகளை அள்ளிச் செல்ல வேண்டும்.-என்.செந்தில்குமார்,தென்னம்பாளையம்.வீணாகும் குடிநீர்திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, முதல் ரயில்வே கேட் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகிறது. சரிசெய்ய வேண்டும்.-எம்.பாக்யலட்சுமி,ஊத்துக்குளி ரோடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X