நுாற்றாண்டு வேப்ப மரம் விறகுக்கு சென்ற வேதனை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நுாற்றாண்டு வேப்ப மரம் விறகுக்கு சென்ற வேதனை

Added : ஜூன் 08, 2020
Share
 நுாற்றாண்டு வேப்ப மரம் விறகுக்கு சென்ற வேதனை

பல்லடம்:பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில், நுாற்றாண்டு பழமையான வேப்ப மரம் ஒன்று உள்ளது. பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரும் அம்மரம், முறிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால், மரத்தை வெட்ட தீர்மானிக்கப்பட்டு, பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.ஆபத்தான மரத்தை உடனடியாக வெட்டாமல், கடந்த நான்கு மாதங்களாக, பொதுப்பணித்துறையினர் அதற்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி இருந்தனர். இச்சூழலில், மரம் வேருடன் வெட்டி சாய்க்கப்பட்டது. பலருக்கும் நிழல் தந்த நுாற்றாண்டு பழமையான வேப்பமரம், வெட்டி அழிக்கப்பட்டு விறகுக்கு எடுத்து செல்லப்பட்டது. என்னதான், வெட்ட வேண்டிய மரம் என்றாலும் கூட, உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரம் அகற்றப்பட்டதை அறிந்த, பசுமை ஆர்வலர்கள் வேதனைப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X