பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ உள்ஒதுக்கீடு: முதல்வரிடம் அறிக்கை

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

சென்னை; மருத்துவ படிப்பில் சேர, அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான அறிக்கை, நேற்று முதல்வரிடம் வழங்கப்பட்டது.

மருத்துவ படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும், 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழக அரசு சார்பில், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது; மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதைத் தொடர்ந்து, நீட் தேர்வில், தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ மாணவர் சேர்க்கையில், உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது.இக்குழு, கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தியது.

அவர்கள் கூறிய கருத்துக்கள் அடிப்படையில், அறிக்கை தயார் செய்யப்பட்டது. நேற்று, நீதிபதி கலையரசன், தலைமை செயலகத்தில், குழு அறிக்கையை, முதல்வர் இ.பி.எஸ்.,சிடம் வழங்கினார். அப்போது, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமை செயலர் சண்முகம் உடனிருந்தனர். குழு அறிக்கை அடிப்படையில், தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X