பொது செய்தி

தமிழ்நாடு

காலாண்டு வரி ரத்தாகுமா? லாரி உரிமையாளர் எதிர்பார்ப்பு

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

திருப்பூர்:''லாரிகளுக்கான காலாண்டு வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்'' என்று, லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வந்தன. ஊரடங்கு தளர்வில், சரக்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை என்றாலும், லாரிகள் இயக்கம் பெருமளவு குறைந்ததாக கூறும் லாரி உரிமையாளர்கள், இதனால், தங்களுடன் 'டிரைவர், கிளீனர், சரக்கு போக்குவரத்து அலுவலக ஊழியர், சுமை துாக்கும் தொழிலாளர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்கின்றனர்.
லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:பெரும்பாலான லாரிகளுக்கு லோடு இல்லை. ஏப்., மே மாதங்களில், அத்தி யாவசிய பொருட்கள் மட்டுமே லாரிகள் மூலம் ஏற்றிவரப்பட்டன. தனிமைப்படுத்துதல், வாகன சோதனை என பல்வேறு நெருக்கடிகள் இருந்ததால், லாரிகள் இயக்குவது பெரும் சிரமமாக இருந்தது. இயக்கப்பட்ட லாரிகள்கூட, நஷ்டத்தில்தான் இயங்கின.
கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு, லாரிகளுக்கு, காலாண்டு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்தாண்டு, ஏப்., முதல் ஜூன் வரை காலாண்டு வரியை ரத்து செய்தால் மட்டுமே, எங்களால் தாக்குப்பிடிக்க முடியும். இன்னும் லாரி போக்குவரத்து சீரடையவில்லை என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X