பொது செய்தி

தமிழ்நாடு

வங்க கடலில் காற்றழுத்த பகுதி

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

சென்னை; காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், மீனவர்கள் வரும், 12ம் தேதி வரை, வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:தமிழகத்தில், தென் மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில், ஓரிரு இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்யும்.மத்திய கிழக்கு வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆந்திர கடலோரம், லட்சத் தீவு, கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதி, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், நாளை பலத்த காற்று வீசும்.ஆந்திர கடலோரம், மத்திய தெற்கு மற்றும் வட கிழக்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான், லட்சத் தீவு, கேரளா மற்றும் கர்நாடகா கடலோர பகுதிகளில், வரும், 12ம் தேதி வரை, மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும்.

எனவே, மேற்கண்ட பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம். குளச்சல் முதல், தனுஷ்கோடி வரை, சில இடங்களில், 3.4 மீட்டர் வரை கடல் அலைகள் கொந்தளிக்கும். எனவே, படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம், இரணியலில் நேற்று, 6 செ.மீ., மழை பெய்துள்ளது. பொன்னமராவதி, நாகர்கோவில், கள்ளக்குறிச்சி, மலையூரில், 3 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X