பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டல் திறந்தாச்சு...! ஆர்டர் சொல்ல ஆளில்லை

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement
ஓட்டல் திறந்தாச்சு...! ஆர்டர் சொல்ல ஆளில்லை

திருப்பூர்:திருப்பூரில் நேற்று ஓட்டல் திறக்கப்பட்டாலும், வாடிக்கையாளர் மத்தியில் பெரிய ஆதரவில்லை.ஐந்தாம் கட்ட ஊரடங்கில், நேற்று முதல் ஓட்டல்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்பட்டது. ஓட்டல்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் மூர்த்தி கூறியதாவது:சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கத்துடன், ஓட்டல்களில் உள்ள, மொத்த இருக்கைகளில், 50 சதவீதம் மட்டுமே, வாடிக்கையாளர்கள் அமர்ந்து, உணவு அருந்த அனுமதிக்கப்படும். கடைகளின் நுழைவு வாயிலில், கைகளை கழுவ, சோப்பு அல்லது சானிடைசர் மற்றும் தண்ணீர் வைக்கப்படும்.
கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், முக கவசம் மற்றும் கையுறை அணிந்திருப்பர். எவரேனும் காய்ச்சல், சளி, இருமல் போன்வற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு கடைக்குள் வர அனுமதி கிடையாது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.திருப்பூரில் நேற்று குறைந்த எண்ணிக்கையிலான ஓட்டல் இயங்கின. அனைத்து நடவடிக்கைகளும் பின்பற்ற முடியாத காரணத்தால் திறக்கப்பட்ட பெரும்பாலான ஓட்டல்களிலும் வாடிக்கையாளர்கள் உணவருந்தவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X