பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் உண்டா?

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

சென்னை; அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் இருந்து, பிடிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படாததால், ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால், அரசு பஸ்களின் போக்குவரத்து முடங்கியது. இந்த நாட்களில் சம்பளம் வழங்குவது குறித்து, அதிகாரிகளிடையே குழப்பம் நீடித்தது. தொடர் விடுப்பு, மருத்துவ விடுப்பு, 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், ஒழுங்காக வேலைக்கு வருவோருக்கும், ஒரே சம்பளம் வழங்குவதா என்ற, விவாதம் எழுந்தது.

இதையடுத்து, கடந்த ஆண்டு வேலை செய்த நாட்களின், சராசரி அடிப்படையில், சம்பளம் வழங்க, போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் முடிவு செய்து, மே மாத சம்பளத்தை வழங்கின. இதை எதிர்த்து, தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதனால், முழு சம்பளம் வழங்குவதாக, நிர்வாகங்கள் உறுதியளித்தன.

ஆனாலும், பிடிக்கப்பட்ட சம்பளம், ஊழியர்களின் வங்கிக் கணக்கில் இதுவரை செலுத்தப்படவில்லை. இது குறித்து, தொழிற்சங்கத்தினர் கூறுகையில், 'வரும், 20ம் தேதிக்குள், சம்பள நிலுவையை வழங்குவதாக, நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்பின்பும் வழங்காவிட்டால், ஆர்ப்பாட்டம் நடத்துவோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X