பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளருக்கு பாதுகாப்பு முதல்வருக்கு, சி.ஐ.டி.யு., கடிதம்

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

திருப்பூர்:தொழிலாளருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என, சி.ஐ.டி.யு., முறையிட்டுள்ளது.சி.ஐ.டி.யு., பனியன் பொது தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சம்பத், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:திருப்பூர் முதலிபாளையம் டெக்கிக் வளாகத்தில் இயங்கும் ஒரு ஆடை உற்பத்தி நிறுவனத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் பணிபுரிகின்றனர். அரசு உத்தரவுப்படி, தற்போது, 50 சதவீத தொழிலாளர்களுடன் நிறுவனங்கள் இயங்குகின்றன.
இந்நிறுவனத்தில், 300 தொழிலாளர் பணியில் உள்ளனர். 200 தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படாததால், தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.ஏற்கனவே இரண்டு மாதத்துக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. தற்போதும், இரண்டு வாரத்துக்கு மேல் வேலை வழங்கப்படதது, தொழிலாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு, பனியன் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X