பொது செய்தி

தமிழ்நாடு

2,520 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தம்

Added : ஜூன் 08, 2020
Share
Advertisement

சென்னை; காற்றாலை மின்சாரம் அதிகம் கிடைப்பதால், தேசிய அனல் மின் கழகம் மற்றும் தமிழக மின் வாரிய அனல் மின் நிலையங்களில், 2,520 மெகாவாட் அளவுக்கு, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், வல்லுாரில், மத்திய அரசின், தேசிய அனல் மின் கழகம், மின் வாரியத்துடன் இணைந்து, தலா, 500 மெகா வாட் திறனில், மூன்று அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைத்துள்ளது. அதிலிருந்து, தமிழகத்திற்கு தினமும், 1,060 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களின், மின் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது.

திருவள்ளூரில் உள்ள அத்திப்பட்டில், மின் வாரியத்திற்கு, தலா, 600 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய, வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையமும்; சேலம், மேட்டூரில், தலா, 210 மெகா வாட் திறனில், நான்கு அலகுகள் உடைய அனல் மின் நிலையமும் உள்ளன.தற்போது, காற்றாலைகளில் இருந்து, 1,500 மெகா வாட் மேல் மின்சாரம் கிடைக்கிறது.

இதனால், அந்த மின்சாரத்தை பயன்படுத்த, மின் வாரியத்தின் வலியுறுத்தலால், வல்லுார் மின் நிலையத்தின் மூன்று அலகுகளிலும், நேற்று முன்தினம் முதல், உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.மேலும், வட சென்னை விரிவாக்க மின் நிலையத்தின் இரண்டாவது அலகிலும்; மேட்டூர் மின் நிலையத்தின் இரு அலகுகளிலும், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தம், 2,520 மொகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X