பொது செய்தி

தமிழ்நாடு

வண்டு, புழுக்களுடன் அரிசி, பருப்பு: அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கலாமே!

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

திருப்பூர்:'பள்ளி சத்துணவு மையங்களில், அரிசி, பருப்பு போன்றவற்றில், வண்டு, புழுக்கள் ஏற்பட்டுள்ளதால், இவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை,' என்கின்றனர் சத்துணவு ஊழியர்கள்.
இது குறித்து, சத்துணவு ஊழியர்கள் கூறியதாவது;சத்துணவு மையங்களில், அரிசி, பருப்பு, எண்ணெய், கொண்டைக்கடலை, பச்சைப்பயறு போன்றவை இருப்பில் உள்ளன. கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படவில்லை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு, இவற்றை கொண்டு சேர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டாலும், இது நடைமுறையில் சிக்கலானது.
தற்போது, அரிசி, பருப்பு, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு போன்றவற்றில், வண்டு, புழுக்கள் ஏற்பட்டுள்ளன. எண்ணெய் கெட்டுப்போயுள்ளது. இவற்றை குடோன்களில் ஒப்படைக்க முடியாது.பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதால், கெட்டுப்போன சத்துணவு பொருட்களை அப்புறப்படுத்தவும், நல்ல நிலையில் உள்ள பொருட்களை குடோன்களில் சேர்க்கவும் நடவடிக்கை தேவை. பள்ளிகள் திறக்கப்படும்போது, இவற்றையே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தக்கூடாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X