தமிழ்நாடு

சங்கடம்! 'சமூக இடைவெளியா.. அப்படினா என்னங்கையா?'

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சங்கடம்! 'சமூக இடைவெளியா.. அப்படினா என்னங்கையா?'

திருப்பூர்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எப்படியான பாதுகாப்பு அம்சத்துடன் நடக்கும் என்பதற்கு சாட்சியாக, ஒரு காட்சியை, திருப்பூர் கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, நேற்று பார்க்க முடிந்தது.'பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க முடியாதா, மாணவர்களின் உயிரைவிட பொதுத்தேர்வு முக்கியமானதா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால், கல்வித்துறையோ தனது முடிவில் நிலையாக நிற்கிறது.மாணவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்படுவதாக, தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது.
பொதுத்தேர்வு வழக்கை உயர் நீதிமன்றம், ஜூன், 11ம் தேதி ஒத்தி வைப்பதாக அறிவித்த அதே வேளையில், நேற்று, திருப்பூரில் அனைத்து பள்ளிகளிலும் பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வினியோகிக்கப்பட்டது. இதற்காக மாணவர்களும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.அரசு நொடிக்கு நொடி பிரசாரம் செய்யும், 'கொரானா வைரஸ் தொற்று', 'சமூக இடைவெளி', 'முக கவசம்', 'கிருமிநாசினி' போன்ற எந்த வாசகங்களும் இவர்களை சென்றடையவில்லையோ, என்று யோசிக்கும் அளவுக்கே, அங்கு வந்திருந்த மாணவர்களின் செயல்பாடு இருந்தது.
முக கவசமின்றியும், ஒருவருக்கும் ஒருவர் கட்டித்தழுவி, சேட்டைகள் செய்தும், , 'சமூக இடைவெளியா.. அப்படினா என்னங்கையா?' என கேட்டும் அளவிற்குமான காட்சிகளே அங்கு இடம்பெற்றிருந்தன.
கல்வித்துறை அளிக்கும், கிருமிநாசினி, முக கவசம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும், தேர்வு எழுதும் வரை மட்டுமே.அதன்பின், மாணவ, மாணவியர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென்ற, தொடர் விழிப்புணர்வை கல்வித்துறை ஏற்படுத்த வேண்டும். அதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஜூன்-202019:24:48 IST Report Abuse
ஆப்பு மாத்தி மாத்தி யோசிக்கிறாங்க.. கேள்வி கேக்குறாங்க. இப்போ உயிர் முக்கியம்னு சொல்றவங்க டாஸ்மாக், மார்க்கெட், கடைகள் எல்லாத்தையும் தொறந்த போது கப்சிப். டாஸ்மாக் திறப்புக்கு சவுண்டு வுட்டுப் பாத்தாங்க. சுப்ரீம் கோர்ட் எல்லாத்தையும் அடைச்சிடுச்சு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X