பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி குடிமராமத்து பணிகள் தலைமை பொறியாளர் திடீர் ஆய்வு

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement
 பொள்ளாச்சி குடிமராமத்து பணிகள் தலைமை பொறியாளர் திடீர் ஆய்வு

பொள்ளாச்சி:தமிழகத்தில், குடிமராமத்துப்பணிகளுக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதில் கால்வாய் துார்வாருதல், குளம் துார்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.கடந்தாண்டு மற்றும் இந்தாண்டில், பரம்பிக்குளம், ஆழியாறு வடிநில கோட்டம், பாலாறு, ஆழியாறு படுகையில் குடிமராமத்து பணிக்காக, 16 கோடியே, 68 லட்சத்து, 74 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், பரம்பிக்குளம் கோட்டத்துக்கு உட்பட்ட கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு, 4.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 21 பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.ஆழியாறு புதிய ஆயக்கட்டு கால்வாய்களுக்கு, 16 சங்கங்கள் சார்பில், 3.57 கோடி ரூபாய் மதிப்பிலும், பழைய ஆயக்கட்டு கால்வாய்களுக்கு, ஐந்து சங்கங்கள் மூலம், 82 லட்சம் ரூபாய் செலவிலும் பதிவு பெற்ற விவசாய நலச்சங்கங்கள் மூலம் பணிகள் நடக்கின்றன. அதில், பொள்ளாச்சி கால்வாய் கிளை எண் 3 மற்றும் 17, பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள அரியாபுரம், வடக்கலுார் கால்வாய்களில், 78 லட்சம் ரூபாய் செலவில் குடிமராமத்து பணிகள் நடக்கிறது.இப்பணிகளை, கோவை மண்டல தலைமை பொறியாளர் விஸ்வநாத் ஆய்வு செய்தார். பணிகள் குறித்து, கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமியிடம் கேட்டறிந்தார்.அதிகாரிகளிடம், பணியின் தரம் குறித்து அறிவுரை வழங்கியதுடன், உரிய தரத்துடன் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என, தலைமை பொறியாளர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது, செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலா மற்றும் உதவி பொறியாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X