தெப்பக்குளம் துாய்மை பணி 2 மாதங்களுக்கு பின் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தெப்பக்குளம் துாய்மை பணி 2 மாதங்களுக்கு பின் துவக்கம்

Added : ஜூன் 09, 2020
Share
 தெப்பக்குளம் துாய்மை பணி 2 மாதங்களுக்கு பின் துவக்கம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும், தெப்பக்குளம் வளாகம் துாய்மைப்படுத்தும் பணியை, நீர் நிலைகள் புனரமைப்பு குழுவினர் மேற்கொண்டனர்.பொள்ளாச்சி நீர்நிலைகள் புனரமைப்பு குழுவினர், தெப்பக்குளம் துார்வாரும் பணியை வாரந்தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கொண்டனர். குளத்தில் இருந்த கழிவுநீர் வெளியேற்றப்பட்டு, மதுபாட்டில்கள் அப்புறப்படுத்தப்பட்டன.குளத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள புதர்கள் அப்புறப்படுத்தப்பட்டன. குளத்தின் ஒரு பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.தெப்பக்குளம் துார்வாரப்பட்டதால், பல ஆண்டுக்கு பின் தெப்பத்தேர் வைபவம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, குளம் பராமரிப்பு மற்றும் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து, நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். கடந்த, இரண்டு மாதங்களுக்கு பின், 35வது வாரமாக, பொள்ளாச்சி நீர்நிலைகள் புனரமைப்பு குழுவினர், துாய்மை பணியில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி நீர்நிலைகள் புனரமைப்பு குழுவினர் கூறுகையில், 'தெப்பக்குளம், இரண்டு மாதங்களுக்கு பின் துாய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். குளம் முழுவதும் சுகாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் பின், நகராட்சியுடன் இணைந்து, தெப்பக்குளம் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X