பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் திட்டப்பணிகளுக்கு பணியாளர்கள் தேர்வு: ஒன்றிய அதிகாரிகள் தகவல்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை ஒன்றியத்தில், நடப்பாண்டில் கூடுதல் திட்டப்பணிகளுக்கான பணியாளர் தேர்வு நடக்கிறது.பொருளாதார நிலையில் சிரமப்படுபவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில், மத்திய அரசின் வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில், 236 ரூபாயாக கடந்தாண்டு நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. கடந்த இரண்டாண்டுகளாக, வேலை உறுதி திட்டத்தில் விவசாயப்பணிகள் மட்டுமே வழங்கப்பட்டன. கடந்தாண்டு, வேலை, உறுதி திட்டப்பணிகளுக்கு பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்திருந்தது.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டில், 'கொரோனா' பாதிப்புகளால் பொருளாதார நிலையில் பெரிதும் சிரமத்துக்குள்ளாகியவர்கள், மீண்டும், வேலை உறுதி திட்டத்தில் பதிவு செய்ய துவங்கி விட்டனர்.உடுமலை ஒன்றியத்தில், நான்காயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், கூடுதல் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், வேலை உறுதி திட்டத்தில் நடப்பாண்டு மீண்டும் கூடுதல் பணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.நடப்பு நிதியாண்டில், கடந்தாண்டின் 16 வகையான விவசாயம் உட்பட மற்ற பணிகளோடு, கூடுதல் பணிகளும், பட்டியலிடப்பட்டுள்ளது.
அதில், ரோடு மேம்பாடு, கிணறு வெட்டுதல், பள்ளி சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் ஊராட்சி நிர்வாக அலுவலக கட்டடங்களை சீரமைத்தல், தனிநபர் வீடுகளுக்கான உறிஞ்சு குழி, சமுதாய உறிஞ்சு குழி உள்ளிட்ட பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், 'விவசாயப்பணிகளோடு, கூடுதல் பணிகளும் வேலை உறுதி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. நிதிஒதுக்கீடு வழங்குவதில், 40 சதவீதம் பணியாளர்கள் நியமித்துக்கொள்வதற்கும், 60 சதவீதம் பணிகளுக்கான தளவாடங்கள் வாங்கிக்கொள்வதற்கும், பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி தற்போது நடக்கிறது. நிதிஒதுக்கீடு வழங்கப்பட்டவுடன், பணிகள் துவக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X