பொது செய்தி

தமிழ்நாடு

கள் இறக்க அனுமதிக்க விவசாய சங்கம் கோரிக்கை

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement
ஆனைமலை:'கள் இறக்கி விற்பனை செய்ய, மாநில அரசு அனுமதியளிக்க வேண்டும்,' என, நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி, ஜமீன்கோட்டாம்பட்டியில், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் பாபு தலைமை வகித்தார். மாநில சட்ட ஆலோசகர் நந்தகுமார், ஆனைமலை வட்டார தலைவர் வரதராஜ் முன்னிலை

ஆனைமலை:'கள் இறக்கி விற்பனை செய்ய, மாநில அரசு அனுமதியளிக்க வேண்டும்,' என, நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி, ஜமீன்கோட்டாம்பட்டியில், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் பாபு தலைமை வகித்தார். மாநில சட்ட ஆலோசகர் நந்தகுமார், ஆனைமலை வட்டார தலைவர் வரதராஜ் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தென்னை மரத்தில் கள் இறக்கி விற்பனை செய்ய மாநில அரசு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க, மத்திய, மாநில அரசுகள், அனைத்து விளை பொருட்களுக்கும் ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தை நிறுத்தும் எண்ணத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். விவசாயிகள் நலன் கருதி, தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்க வேண்டும், மின்வாரியத்தை தனியார் மையப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். இவை, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X