பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சிறப்பு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சிறப்பு கூட்டம்

Added : ஜூன் 09, 2020
Share

உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள துவக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்புக்கூட்டம் நடந்தது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, இதுவரை இல்லாத வகையில், நடப்பாண்டில், துவக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுத்தேர்வில் தேர்வறை கண்காணிப்பாளர்களாக பணி வழங்கப்படுகிறது.உடுமலை கல்வி மாவட்டத்தில், தேர்வுப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்புக்கூட்டம், எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. சமூக விலகல் பின்பற்றுவதற்கு மதியம், 1:00 மணி மற்றும் 3:00 மணிக்கென இரண்டு பிரிவுகளாக, கூட்டம் நடத்தப்பட்டது. தேர்வறையில், விதிமுறைகளை பின்பற்றுவதற்கும், ஒழுங்கீனமான செயல்களை தடுப்பது, மாணவர்களை வழிநடத்துவது, பாதுகாப்பான முறையில் தேர்வுகளுக்கு சென்று வருவது, மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது குறித்து, வட்டார கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X