பொது செய்தி

தமிழ்நாடு

கடைகளில் முகக்கவசம், சமூக விலகல் கட்டாயம்: பின்பற்றாவிட்டால் 'சீல்': சப்-கலெக்டர் எச்சரிக்கை

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:''பொள்ளாச்சியில் உள்ள கடைகளில், சமூக விலகல், முகக்கவசம் அணியாவிட்டால், கடைக்கு 'சீல்' வைக்கப்படும்,'' என, சப் - கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், கடைக்காரர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. சப் - கலெக்டர் வைத்திநாதன் தலைமை வகித்தார். தாசில்தார்கள் தணிகைவேல், வெங்கடாச்சலம், நேர்முக உதவியாளர் சங்கீதா, நகராட்சி கமிஷனர்
 கடைகளில் முகக்கவசம், சமூக விலகல் கட்டாயம்: பின்பற்றாவிட்டால் 'சீல்': சப்-கலெக்டர் எச்சரிக்கை

பொள்ளாச்சி:''பொள்ளாச்சியில் உள்ள கடைகளில், சமூக விலகல், முகக்கவசம் அணியாவிட்டால், கடைக்கு 'சீல்' வைக்கப்படும்,'' என, சப் - கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், கடைக்காரர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. சப் - கலெக்டர் வைத்திநாதன் தலைமை வகித்தார். தாசில்தார்கள் தணிகைவேல், வெங்கடாச்சலம், நேர்முக உதவியாளர் சங்கீதா, நகராட்சி கமிஷனர் (பொ) முருகேசன் முன்னிலை வகித்தனர்.
தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.சப் - கலெக்டர் பேசியதாவது:கடைகளில், சமூக விலகல் கட்டாயம் பின்பற்ற வேண்டும். வியாபாரிகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.தவறும் பட்சத்தில், அரசு அதிகாரிகள் சோதனையின் போது அபராதமாக வாடிக்கையாளர்கள் ஒருவருக்கு, 100 ரூபாய்; கடை உரிமையாளர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மறுமுறை தொடர்ந்து நடைபெற்றால் கடை 'சீல்' வைக்கப்படும்.எந்த ஒரு வணிக நிறுவனத்திலும், குளிர்சாதன வசதி பயன்படுத்த கூடாது; அவ்வாறு பயன்படுத்துவது தெரிய வந்தால் கடை அல்லது நிறுவனத்துக்கு 'சீல்' வைக்கப்படும்.கடைகளில், தக்க உபகரணங்கள் கொண்டு கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தமாக வைக்க வேண்டும். கை கழுவ தேவையான சோப்பு மற்றும் தண்ணீர் வசதி அல்லது சானிடைசர் வைத்திருப்பது அவசியமாகும். ஒரே சமயத்தில், ஐந்து பேருக்கு மேல் நிறுவனத்தில் அனுமதிக்க கூடாது.ஓட்டல்களில் ஒரு மேஜையில், இரண்டு பேருக்கு மேல் அனுமதிக்க கூடாது. தேநீர் கடைகளில் பார்சல்கள் மட்டும் கொடுக்க வேண்டும்.அனுமதியில்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தள்ளுவண்டி கடைகள், ரோட்டோரம் உள்ள தற்காலிக கடைகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பேக்கரியில், டீ பார்சல் மட்டும் வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.
'புகார் பெட்டி'க்கு நடவடிக்கை!ஆலோசனை கூட்டத்தில் பேசிய சப் - கலெக்டர், ''மகாலிங்கபுரத்தில் உள்ள, நடைபாதை உணவு கடைகள், கழிவுகளை சாக்கடையில் கொட்டுவதாகவும்; அதனால், எலிகள் எண்ணிக்கை அதிகரித்து, குடியிருப்பு பகுதியில் தொல்லை தாங்க முடியவில்லை,' என, 'தினமலர்' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.இதை, அதிகாரிகள் கண்காணித்து கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X