நில வளம் பெருக...!ஏழு குட்டைகளில் மண் எடுக்க அனுமதி: விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நில வளம் பெருக...!ஏழு குட்டைகளில் மண் எடுக்க அனுமதி: விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கல்

Added : ஜூன் 09, 2020
Share
உடுமலை:உடுமலை தாலுகாவில், ஏழு குட்டைகளில், 3,555 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.பருவமழை துவங்கியுள்ள நிலையில், நீர் நிலைகள் துார்வாரி, அதிக மழை நீரை சேமிக்கும் வகையிலும், விவசாய விளை நிலங்கள் மண் வளம் பெருகும் வகையிலும், குளம், குட்டைகளில் விவசாயிகள் மண்

உடுமலை:உடுமலை தாலுகாவில், ஏழு குட்டைகளில், 3,555 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.பருவமழை துவங்கியுள்ள நிலையில், நீர் நிலைகள் துார்வாரி, அதிக மழை நீரை சேமிக்கும் வகையிலும், விவசாய விளை நிலங்கள் மண் வளம் பெருகும் வகையிலும், குளம், குட்டைகளில் விவசாயிகள் மண் அள்ளிக்கொள்ள அரசு அனுமதியளித்துள்ளது.
அதன் அடிப்படையில், உடுமலை தாலுகாவிலுள்ள, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள, அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள, குளம், குட்டைகளில், விவசாயம், மண் பாண்டம் செய்ய மற்றும் வீட்டு உபயோகத்திற்கு, வண்டல் மண், சவுடு மண், கிராவல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.3,555 கன மீட்டர் அனுமதிஉடுமலை தாலுகாவில், சின்ன வாளவாடி, சப்டியார் குட்டையில், 920 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டு, 25 விவசாயிகள், ஒதுக்கீடு செய்யப்பட்ட மண் முழுவதையும் எடுத்துக்கொள்ள அனுமதி பெற்று விட்டனர்.மேலும், தீபாலபட்டி குட்டையில், 405 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ளவும், மொடக்குப்பட்டி நாயக்கர் குளத்தில், 540 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.அதே போல், ஆண்டியகவுண்டனுார், வெள்ளமடை குட்டையில், 560 கன மீட்டர், புங்கமுத்துார் நவக்கரை ஓடையில் 500 கன மீட்டர், உடுக்கம்பாளையம் குட்டையில், 370 கன மீட்டர், கே.ரெட்டிபாளையம், பீச்சான்குட்டையில், 255 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க அழைப்புவருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது :குளம், குட்டைகள் ஆழப்படுத்தி, கூடுதல் மழைநீர் சேகரித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், விவசாயிகள், அருகிலுள்ள நீர் நிலைகளில் இலவசமாக மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.விவசாயிகளுக்கு, ஒரு ெஹக்டேருக்கு, நன்செய் நிலமாக இருந்தால், 185 கன மீட்டர், புன்செய் நிலமாக இருந்தால், 225 கன மீட்டர், வீட்டு உபயோகமாக இருந்தால், நபருக்கு, 30 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ளலாம்.மண்பாண்டம் செய்பவர்களுக்கு, ஒரு நபருக்கு, அதிக பட்சம், 60 கன மீட்டர் வழங்கப்படுகிறது.நீர் நிலைகளுக்கு அருகிலுள்ள விவசாயிகள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார் மூலம், நிலத்தின் பரப்பளவு, சிட்டாவுடன் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
இந்த மண், சம்பந்தப்பட்ட பணிகளுக்கு, அனுமதி பெற்ற சர்வே எண் விவசாய நிலங்களுக்கு மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். அனுமதி பெற்றது முதல், 20 நாட்களுக்குள், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். விதி முறை மீறினால், வாகனம் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்,' என விதிமுறைகள் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது.விருப்பம் உள்ள விவசாயிகள், வி.ஏ.ஓ., சான்று பெற்று, தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X