வன்முறை போராட்டங்கள் பிரிட்டன் பிரதமர் கண்டனம்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

லண்டன்; 'இனவெறிக்கு எதிரான போராட்டங்களின் தரம், குண்டர்களால் தாழ்த்தப்பட்டுள்ளது' என, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர், போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கர், போலீஸ் அத்துமீறலில் கொல்லப்பட்டார்.இதைத் கண்டித்து, அமெரிக்காவில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டன் உட்பட பல நாடுகளில், இனவெறிக்கு எதிராக, போராட்டங்கள் நடந்து வருகின்றன.சமீபத்தில், தலைநகர் லண்டனில் நடந்த போராட்டங்களின்போது, போலீசார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும், முன்னாள் பிரதமர், வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலை உட்பட பல்வேறு புராதன நினைவிடங்களையும் அவர்கள் அசிங்கப்படுத்தியுள்ளனர்.இது குறித்து, போரிஸ் ஜான்சன் கூறியுள்ளதாவது:இனவெறிக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.குண்டர்களால், போராட்டங்களின் தரம் தாழ்த்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களின் வன்முறையில், எட்டு போலீசார் காயமடைந்துள்ளனர்.

மேலும் பல சிலைகள் அவமரியாதை செய்யப்பட்டுள்ளன. இது கண்டிக்கத்தக்கது. இது போன்ற வன்முறைகளுக்கு இடம் தர முடியாது. 'கொரோனா' வைரஸ் பாதிப்பு உள்ள நிலையில், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் போராட்டக்காரர்கள் மீறியுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X