சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டா கேட்டு மக்கள் சாலை மறியல்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement
 பட்டா கேட்டு மக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மீன்கரை ரோட்டோரம் வசிக்கும் மக்கள், வீட்டு மனைப்பட்டா வழங்க கோரி, நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த வாகனங்கள், அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.தகவல் அறிந்து வந்த மேற்கு இன்ஸ்பெக்டர் வைரம், வருவாய் ஆய்வாளர் பட்டுராஜா மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். பொதுமக்கள் கூறியதாவது:கடந்த, 40 ஆண்டுக்கும் மேலாக, 13 வீடுகளில் குடியிருந்து வருகிறோம். எவ்வித வசதியில்லாமல் தினக்கூலிக்கு சென்று வாழ்க்கையை நகர்த்துகிறோம். இந்நிலையில், ரோடு விரிவாக்க பணிக்கு, இருபுறமும் தலா, மூன்று மீட்டர் அகலப்படுத்தப்படுகின்றன. ரோடு விரிவாக்கம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக வீட்டை காலி செய்ய அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.திடீரென, காலி செய்ய சொன்னால் குடும்பத்துடன் எங்கே செல்வோம். அதிகாரிகள் உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்; மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, எம்.எல்.ஏ., கலெக்டர், சப் - கலெக்டர் மற்றும் தாசில்தாரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, குடியிருப்பை அகற்ற கால அவகாசமும், மாற்று இடமும் வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.அவர்களை, அதிகாரிகள் சமரசம் செய்து, ரோட்டோரம் அழைத்து வந்து பேச்சு நடத்தி, 'உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.இதனையடுத்து, போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X