பொரியல் தட்டை சாகுபடி களமிறங்கிய விவசாயிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொரியல் தட்டை சாகுபடி களமிறங்கிய விவசாயிகள்

Added : ஜூன் 09, 2020
Share
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு மேற்கு பகுதிகளான சிங்கையன்புதுார், சொக்கனுார், வடபுதுார், வீரப்பகவுண்டனுார், கோவிந்தாபுரம், நெ.10 முத்துார் உள்ளிட்ட கிராமங்களில் பொரியல் தட்டை சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.பொரியல் தட்டை விதைப்பு செய்ததில் இருந்து, 55 நாட்களில் காய்ப்புக்கு வருகிறது. இதற்கு, வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். சாகுபடிக்கு அதிகளவில்
 பொரியல் தட்டை சாகுபடி களமிறங்கிய விவசாயிகள்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு மேற்கு பகுதிகளான சிங்கையன்புதுார், சொக்கனுார், வடபுதுார், வீரப்பகவுண்டனுார், கோவிந்தாபுரம், நெ.10 முத்துார் உள்ளிட்ட கிராமங்களில் பொரியல் தட்டை சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.பொரியல் தட்டை விதைப்பு செய்ததில் இருந்து, 55 நாட்களில் காய்ப்புக்கு வருகிறது. இதற்கு, வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். சாகுபடிக்கு அதிகளவில் செலவு இல்லை. காய்ப்புக்கு வந்ததில் இருந்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஏக்கர் ஒன்றுக்கு 300 கிலோ பொரியல் தட்டை கிடைக்கிறது. கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், பொரியல் தட்டை கிலோ ஒன்றுக்கு, 16 ரூபாய்க்கு ஏலம் செல்கிறது. பொரியல் தட்டை பயறு அதிகளவில், கேரளா மாநிலத்திற்கு விற்பனையாவதால், இப்பகுதியில் பொரியல் தட்டை பயிறு சாகுபடியை விவசாயிகள் ஆண்டு முழுவதும் செய்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X