பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றரை கி.மீ., நடந்து சென்று பஸ் ஏறும் பயணிகள்: மண்டலங்களின் எல்லையில் அவலம்

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் மற்றும் அருகிலுள்ள சாமிநாதபுரம் வேறு மண்டலங்களாக உள்ளதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒரு மண்டலத்தில் இயக்கப்படும் பஸ், அடுத்த மண்டலத்துக்குள் நுழையக்கூடாது என்று விதிமுறை உள்ளது.இந்த அடிப்படையில், திருப்பூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மடத்துக்குளம் ஒரு மண்டலமாகவும், இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சாமிநாதபுரம் வேறு மண்டலமாகவும் அரசு அறிவித்துள்ளது.உடுமலை, பொள்ளாச்சி பகுதியில் இருந்து வரும் பஸ்கள், மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கி விட்டு சென்று விடுகின்றன. திண்டுக்கல், மதுரை, பழநிக்கு செல்லும் மக்கள், இந்த இடத்திலிருந்து, ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சாமிநாதபுரம் வரை நடந்து சென்று, அங்கிருந்து பஸ்சில் செல்கின்றனர்.அந்த மண்டலத்தில் உள்ள பஸ்களும், சாமிநாதபுரம் வரை தான் இயக்கப்படுகிறது. அங்கு இறங்கும் பயணிகளும், இதுபோல் மடத்துக்குளம் நடந்து வந்து உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு பயணிக்கின்றனர். மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால், இந்த ஒன்றரை கிலோ மீட்டர் வழித்தடம் இணைக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.பயணிகள் கூறுகையில், 'ஒரு மண்டல எல்லையில் பயணிகள் இறக்கி விடப்படுவதால், அடுத்த மண்டல எல்லை வரை நடந்து சென்று அவதிப்படுகின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் இது போல் நடந்து செல்வதால் பல வகை சிரமங்கள் ஏற்படுகிறது. இந்த இடைப்பட்ட தொலைவில் போதிய பாதுகாப்பு இல்லை. அமராவதி ஆற்றுப்பாலத்தில் மின் விளக்குகளும் கிடையாது. 'எந்த ஒரு மண்டலமாக இருந்தாலும், எல்லைகள் வரை இயக்கப்படுவது தவிர்த்து, பஸ் ஸ்டாண்ட் வரை பஸ்கள் வந்து திரும்பும் அளவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X