சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்தியால் குத்தி 3 இடங்களில் வழிப்பறி: முடுக்கி விட வேண்டும் போலீஸ் ரோந்து பணி

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

கோவை:ரத்தினபுரியில் ஒரே நாளில், மூன்று இடங்களில், கத்தியால் குத்தி வழிப்பறி சம்பவம் நடந்துள்ளது.l டாடாபாத், ராதாகிருஷ்ணன் ரோட்டை சேர்ந்த கருப்பசாமி,24, அங்குள்ள பார்க் வழியாக நேற்று முன்தினம் இரவு நடந்து வந்தார். அங்கு வந்த மூன்று பேர் கும்பல், கருப்பசாமியிடம் கத்தியை காட்டி, மிரட்டி பணம் கேட்டனர்.
கொடுக்க மறுத்ததால், கத்தியால் குத்தி விட்டு, பாக்கெட்டிலிருந்த 500 ரூபாயை பறித்து தப்பினர்.l நரசிம்மநாயக்கன்பாளையம், ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ஆவின்,23; சிவானந்தாகாலனியிலுள்ள சகோதரி வீட்டுக்கு, பைக்கில் வந்தார். காந்திநகர் பாலம் அருகில், இருட்டில் நின்று கொண்டிருந்த, ரத்தினபுரியை சேர்ந்த கிறிஸ்டோபர், 28, கட்சன், 24, குணசிங் ஆகியோர், பணம் கேட்டு மிரட்டினர்.
கொடுக்க மறுத்ததால், கத்தியால் குத்தினர். ரத்னபுரி போலீசார் மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.l கண்ணப்பன் நகர், புதுதோட்டத்தை சேர்ந்த அருண் என்பவரிடம், சிவானந்தா காலனி, 105 அடி ரோட்டில், மூன்று பேர் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி, 50,000 ரூபாய் மதிப்புள்ள பைக்கை பறித்து சென்றனர்.ஊரடங்கு காரணமாக மது குடிக்க, பணமில்லாமல் தவிக்கும் சிலர், இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், பொதுமக்கள் ஜாக்கிரதையாக நடமாட வேண்டும். போலீசார் ரோந்து பணியை முடுக்கி விட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X