தமிழ்நாடு

மாறும் அபாயம் தவிர்ப்போம் சென்னை போல் கோவை! விதிமுறைகளை பின்பற்றுவோம்

Updated : ஜூன் 09, 2020 | Added : ஜூன் 09, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 மாறும் அபாயம் தவிர்ப்போம் சென்னை போல் கோவை! விதிமுறைகளை பின்பற்றுவோம்

கோவை:'நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அவுட்டிங், நண்பர்களுடன் மீட்டிங்...' என சமூக வலைதள ஸ்டேட்டஸ்களையும், கடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் 'மாஸ்க்' அணியாத சிறு குழந்தைகளையும் பார்க்கும் போது, 'பகீர்' என்கிறது மனது.
மீண்டும் நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மத்தியில் மாவட்ட நிர்வாகம், இன்னும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; விதிமுறை மீறுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டமும் கட்டமும் மாயம்!கொரோனா வந்த புதிதில், கடைகள் முன் வட்டங்களையும், கட்டங்களையும் வரைந்து, அதனுள் வரிசையில் நின்று, பொருட்கள் வாங்க அறிவுறுத்தப்பட்டது. வைரஸ் கட்டுக்குள் வர, அந்த கட்டுப்பாடுகளும் உதவியதை மறுக்க முடியாது.
இன்றோ, கடைகள், சந்தைகள் போன்ற பெரும்பாலான இடங்களில், சமூக இடைவெளியை காண முடிவதில்லை. ஏன்...அரசுத்துறை நிகழ்ச்சிகளிலும், சமூக இடைவெளி மாயமாகி விட்டதை காண முடிகிறது. மளிகை வாங்க மனைவியுடன்!நோயை கட்டுப்படுத்துவதில், அன்று காண்பித்த வீரியம் இன்று குறைந்து விட்டதா அல்லது குறைக்கப்பட்டு விட்டதா என்பது, சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.பதில் எதுவாக இருந்தாலும், பாதிப்பு அனைவருக்கும்தான். ஆகவே, விழிப்புணர்வு பணிகளை முன்பை விட, தீவிரமாக மேற்கொள்ள வேண்டியது முக்கியம்.அரசு இயந்திரத்தை மட்டும் சொல்லி பயனில்லை. நோய் பரவாமல் தடுப்பதில், பொதுமக்களுக்குதான் அதிக பங்கு இருக்கிறது.
பொது இடங்களில், அடித்துப்பிடித்து உரசியபடி நிற்பது, மாஸ்க் அணியாமல் சுற்றுவது, குழந்தைகள், மனைவி சகிதம் குடும்பத்துடன் பைக்கில் பறப்பது, மளிகை வாங்கக் கூட மனைவியுடன் வருவது, முதியோரை கடைகளுக்கு அனுப்புவது...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.விமானங்களில் வருகிறது வைரஸ்!விமானம், ரயில், பேருந்து சேவை துவக்கப்பட்ட பின், வெளியூர்களில் இருந்து வருபவர்களால், குறைந்திருந்த பாதிப்புகள் உயரத் துவங்கியுள்ளன.
இச்சூழலில், நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் கொரோனா உள்ளதாக கருதி, பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்தாக வேண்டும்.விதிமுறைகளை பின்பற்றி, ஜாக்கிரதையாக இருக்க தவறினால், சென்னைக்கு ஏற்பட்டுள்ள கதி, கோவைக்கும் வந்து விடும். மீண்டும் வீடுகளுக்குள் முடங்க வேண்டிய நிலை உருவாகி விடும்.ஆகவே...வீடுகளுக்குள் பழையபடி முடங்கலாமா, விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான வாழ்க்கை மேற்கொள்ளலாமா...
முடிவு உங்கள் கைகளில்!'கொரோனா வீரியம் அதிகரித்துள்ளது'கோவை கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:தற்போது, கொரோனாவின் வீரியம் அதிகரித்துள்ளது. பாதிப்பு இல்லை என்ற அலட்சியம் வேண்டாம். ஒவ்வொருவரும் சுய பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளாவிடில், ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ப கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடைகள், உணவகங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டு இருப்பினும், சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினி பயன்பாடு உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றப்படாவிடில், பாரபட்சமின்றி மூடப்படும்.மீண்டும் நோய்த்தொற்று உயராமலிருக்க, பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இன்னும் ஊரடங்கு முடிவுக்கு வரவில்லை. ஆகவே, தேவையின்றி பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal - COIMBATORE,இந்தியா
10-ஜூன்-202008:28:19 IST Report Abuse
venugopal Every body knows the seriousness. Individual discipline is the key to avoid the spread. Government and police cannot continue control individual discipline who purposely break the medical and corona advise. It is amounting to stupidity as the lack of precaution will all.
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
09-ஜூன்-202011:14:19 IST Report Abuse
s vinayak நல்லா இருக்கே? நியாயம். நிர்வாகம் என்ன? திறந்து போட்டுக்கொண்டு போகும் ஒவ்வொருவருக்கும் வெளியில் இருக்கும்வரை இலவசமாக பொத்தி விட்டுக் கொண்டே இருக்கமுடியுமா? நாம் அறிவுடன் நோயின் தன்மை அறிந்து நடந்து கொள்ளவேண்டும்
Rate this:
Cancel
NoBs - chennai,இந்தியா
09-ஜூன்-202008:33:10 IST Report Abuse
NoBs தமிழ்நாட்டின் எழுத்து/படிப்பு அறிவு என்பது விழுக்காடு இருந்தாலும் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சுய மரியாதை பகுத்தறிவு பொன்ரவற்றை அறிந்தவர்களாக இருந்தாலும் செயல்பாட்டில் இவற்றின் பாதிப்பு சிறிது கூட இல்லாமல் இருக்கிறோம் என்பதே உண்மை. உலகம் முழுக்க காரோண என்னும் கிருமி லட்ச கணக்கில் மக்களை பாதித்தும் உயிர்களை பறித்தும் வருகிறது என்று தினமும் காணொலியிலும் தினசரிகளில் வருகிறது இந்தியாவிலும் அதன் தாக்கம் பரவி வருகிறது தமிழ்நாடும் அதன் பிடியில் சிக்கியுள்ளது என்பது பள்ளி சிறார்களுக்கு தெரியும். தனி மனித இடைவெளி முகக்கவசம் இவைதான் இதிலிருந்து மீள உதவும் என்று எப்பக்கம் நோக்கினாலும் மருத்துவ நிபுணர்களும் அரசுகளும் திரும்பத்திரும்ப கூறுகின்றன. ஆனாலும் ஐந்து அறிவு படைத்த விலங்குகளுக்கும் நமக்கும் ஒரு வேறுபாடுமில்லை என எவ்விடம் சென்றாலும் மந்தைமந்தையாக கூட்டம் இட்டுக்கொண்டும் முகக்கவசம் அணியாமலும் அலைவது என்ன படிப்பு என்ன பகுத்தறிவு. இதில் அரசுகள்தான் என்ன செய்ய முடியும் மருத்துவர்களாலும் ஒரு உதவியும் செய்ய இயலாது இதற்க்கு ஒரு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் வரை. நாமே திருந்தினால் வழியுண்டு. இல்லையென்றால் கூண்டோடு கைலாசம். இதுதான் நிதர்சனம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X