ஹால் டிக்கெட்...ஹாஸ்டல்... மாஸ்க்! 10ம் வகுப்பு தேர்வுக்கு கோவை தயார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஹால் டிக்கெட்...ஹாஸ்டல்... மாஸ்க்! 10ம் வகுப்பு தேர்வுக்கு கோவை தயார்

Added : ஜூன் 09, 2020
Share

கோவை:பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்த, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:தேர்வெழுதும் மாணவர்கள், ஹால்டிக்கெட்டுகளை பள்ளிகளிலேயே பெற வசதி செய்யப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதியை இணையதளம் மூலம் பதிவிட்டு, தாங்களே ஹால் டிக்கெட்டை பெறலாம்.
பிளஸ் 2 வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் தேர்வு எழுதாத மாணவர்கள், ஏற்கனவே வழங்கப்பட்ட ஹால் டிக்கெட் வாயிலாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தில் வரும், 18ம் தேதி தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்வு குறித்த சந்தேகங்களை தீர்க்க, ஐந்து ஹெல்ப்லைன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 3, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு தலா ஒரு முகக்கவசமும் வழங்கப்படும்.
மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு சிறப்பு பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு, தனியார் பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களின் வசதிக்காக, வரும் 11ம் தேதி முதல், விடுதிகளையும் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் குறித்த, மேலும் விபரங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளரை, 98948 63972, 90808 75781, 94866 18858, 98947 31320, 88380 89283 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X