உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு இயந்திரங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு இயந்திரங்கள்

Added : ஜூன் 09, 2020
Share
ஊட்டி:நீலகிரியில் தோட்டக்கலை துறையின் மூலம் பல்வேறு வகையான செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு பின், அவர்களை இணைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஏற்படுத்தி அவற்றின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான தோட்டக்கலை வேளாண் தொழில்நுட்பங்கள்
 உழவர் உற்பத்தியாளர்  குழுவுக்கு இயந்திரங்கள்

ஊட்டி:நீலகிரியில் தோட்டக்கலை துறையின் மூலம் பல்வேறு வகையான செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு பின், அவர்களை இணைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஏற்படுத்தி அவற்றின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான தோட்டக்கலை வேளாண் தொழில்நுட்பங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும். உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு அரசின் சார்பாக பண்ணை இயந்திரங்கள் வாங்க தொகுப்பு நிதியாக, 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.2019--20ம் ஆண்டிற்கான உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அரசின் நிதியில், 52 பண்ணை இயந்திரங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில், ஒப்புதல் அளிக்கப்பட்ட பண்ணை இயந்திரங்களை, உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு, கலெக்டர்இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X