பொது செய்தி

தமிழ்நாடு

கூடலூரில் தொடரும் பருவமழை: நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement
 கூடலூரில் தொடரும் பருவமழை: நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு

கூடலுார்:கேரளாவை தொடர்ந்து, கூடலுாரில் பருவமழை பெய்து வருவதால், பாண்டியார்-புன்னம்புழா உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.கேரளாவில் கடந்த, 1ம் தேதி முதல் பருவமழை துவங்கி, தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக, கேரள மாநிலம் மலப்புரம் எல்லையை ஒட்டிய, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் பருவ மழை துவங்கியுள்ளது. இப்பகுதியில், இடைவெளி விட்டு, விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டுள்ளது.இங்கு உற்பத்தியாகும் பாண்டியார்-புன்னம்புழா உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதுடன் நிலத்தடி நீர் உயர தொடங்கியுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில்,'கடந்த ஆண்டு குறித்த நேரத்தில் பருவமழை பெய்ததால் நெல் விவசாயமும், தொடர்ந்து கோடையில் காய்கறி விவசாயமும் எதிர்பார்த்த மகசூல் கிடைத்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக, விவசாய விளைபொருள்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காமல் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. நடப்பாண்டிலும் குறித்த நேரத்தில் பருவமழை துவங்கியுள்ளது. இதனால், நெல் விவசாயமும் அத னைத் தொடர்ந்து காய்கறி விவசாயமும் நல்ல மகசூல் கிடைக்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X