ஐ.நா., அறிக்கை தவறாக சித்தரிப்பு இந்தியா மீது பாக்., குற்றச்சாட்டு

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

இஸ்லாமாபாத்; 'பாகிஸ்தான் எதிர்ப்பு பிரச்சாரத்தை ஊக்குவிக்கவே, ஐ.நா.,வின் அறிக்கையை, இந்தியா தவறாக சித்தரிக்க முயற்சிக்கிறது' என, பாக்., வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

பயங்கரவாத செயல்ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை, தன் அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் இயங்கும் வெளிநாட்டு பயங்கரவாதிகளில், 6,500 பேர், பாகிஸ்தானியர்கள் என்றும், பாக்.,கின் ஜெய்ஷ் - இ - முஹமது மற்றும் லஷ்கர் - இ - தொய்பா அமைப்புகள், அங்கு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியிருந்தது.

இதுகுறித்து, கடந்த, 5ம் தேதி, இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராஜ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், 'பயங்கரவாதத்தின் மையமாக பாக்., இருப்பதை, சர்வதேச சமூகம் உணர்ந்துவிட்டது. 'பாக்.,கில், ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் இருப்பதை, பிரதமர் இம்ரான் கான் கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில், ஐ.நா.,வின் அறிக்கையும் அமைந்துள்ளது' என்றார்.

இந்நிலையில், இந்தியாவின் கருத்துக்கு பதிலளித்து, பாக்., வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:கண்டிக்கிறோம்காஷ்மீர் விவகாரத்தில் இருந்து, சர்வதேச கவனத்தை திசைத் திருப்பவே, இந்திய அரசு, இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. பாகிஸ்தான் எதிர்ப்பு பிரச்சாரத்தை ஊக்குவிக்கவே, ஐ.நா.,வின் அறிக்கையை, இந்தியா தவறாக சித்தரிக்க முயற்சிக்கிறது.உலக சமூகம் தவறாக வழிநடத்தப்படாது என, நாங்கள் நம்புகிறோம்.

ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டு வரும் அமைதி நடவடிக்கைகளை எளிதாக்க, பாக்., எடுக்கும் முயற்சிகளை, எங்கள் சர்வதேச கூட்டாளிகள் நன்கு அறிவர். பிரதமர் இம்ரான் கானின் கருத்துக்களையும், இந்தியா திரித்துக் கூறியுள்ளது. இந்தியாவின் இந்த செயலை, வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X