ஹால் டிக்கெட் உடன் முகக்கவசம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஹால் டிக்கெட் உடன் முகக்கவசம்

Added : ஜூன் 09, 2020
Share

மதுரை : மதுரையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டுடன் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.மாவட்டத்தில் 40,124 மாணவர்கள் 469 மையங்களில் ஜூன் 15ல் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட் பள்ளிகளில் வழங்கப்பட்டன. பல பள்ளிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது. கொரோனா அச்சத்தால் மாணவர் பலர் பள்ளிகளுக்கு வரவில்லை. ஹால்டிக்கெட் வழங்கும் பணிகளை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் டி.இ.ஓ.,க்கள் கண்காணித்தனர்.அதிகாரி ஒருவர் கூறுகையில் "மூன்று முகக்கவசங்களுக்கு பதில் இரண்டு மட்டும் வழங்கப்பட்டது. ஒன்று தேர்வு நடக்கும் போது வழங்கப்படும். இன்றும் (ஜூன் 9) பள்ளிகளில் வழங்கப்படும்" என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X