பொது செய்தி

தமிழ்நாடு

தனித்தன்மையை நிரூபிப்போம்!

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

சீதாராமன், ஜவுளி வர்த்தகம்,தொண்டாமுத்துார்: ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதியில், சர்வதேச நாடுகளின் நம்பகத்தன்மை பெற்ற இடமாக, இந்தியா வளர வேண்டும். அதற்கு, ஜவுளி உற்பத்தி உள்ளிட்டவற்றில் உள்ள சிறப்பம்சங்களை, உலக நாடுகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
உலக நாடுகள் முடங்கியுள்ள சமயத்தில், நமது தனித்தன்மையை நிரூபிக்க சரியான தருணமும் கூட. இச்சமயத்தில் தொழில் துறையினர் சுறுசுறுப்பாக செயல்படுவதுடன், அரசும் தேவையான உதவிக்கரம் நீட்டினால், சர்வதேச அளவில் நம் தரத்தை நிலைநாட்டி வர்த்தகத்தை அதிகம் ஈர்க்க முடியும்.தனஜெயன், வெல்டர், ஆனைகட்டி: சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீண்டு வர, மத்திய, மாநில அரசுகள், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
இச்சூழலில், மின் கட்டண சலுகைகளையும் அதிகம் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். தாழ்வழுத்த மின் இணைப்புகளுக்கு மின் அளவு, 112 கிலோ வாட் இருந்ததை, 150 கிலோ வாட் ஆக உயர்த்தி, ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இதை உடனடியாக அரசிதழ் ஆணையாக வெளியிட வேண்டும். இதன்மூலம் பவுண்டரி தொழில் உள்ளிட்டவற்றின் தேவைகள் பூர்த்தியாவதுடன், உற்பத்தி செலவும் ஓரளவு கட்டுப்படுத்தப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X