பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ முகக்கவசம் உற்பத்தியில் தன்னிறைவு

Added : ஜூன் 09, 2020
Share
Advertisement

திருப்பூர்:'மருத்துவ முகக் கவசங்கள் உற்பத்தியில், நம் நாடு தன்னிறைவு அடைந்துள்ளது. இவற்றை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும்' என, உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை, திருப்பூர், கோவை உட்பட நாடு முழுதும், முக கவசங்கள் தயாரிப்பு தீவிரமடைந்தது. உற்பத்தி அதிகரித்ததால், மருத்துவம் சாரா முக கவசங்கள் ஏற்றுமதி செய்ய, கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டது.
அதேசமயம், 'என்-95' முக கவசங்கள் ஏற்றுமதிக்கான தடை நீடிக்கிறது.மருத்துவ முக கவச உற்பத்தி நிறுவனத்தினர் கூறுகையில், 'தினமும், 1.5 லட்சம் சர்ஜிக்கல் மூன்று அடுக்கு கவசங்கள் உற்பத்தி செய்யப்படுவதால், 53 கோடி முகக்கவசங்கள் உபரியாக உள்ளன. இதேபோல், நான்கு அடுக்கு கவசங்கள், 19 லட்சமும், மறுபயன்பாட்டுக்குரியவை, 50 லட்சமும் கூடுதலாக உள்ளன. 10 லட்சம், 'என்-95' கவசங்களும் இருப்பில் உள்ளன. மருத்துவ முக கவசங்கள் உற்பத்தியில், நம் நாடு தன்னிறைவை எட்டியுள்ளது. உபரியாக உள்ள மருத்துவ முக கவசங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X